தற்போது மீரிகம – அம்பேபுஸ்ஸவுக்கு இடையிலான புகையிரத பாதை தனிவழிப் பாதையாக திறக்கப்பட்டுள்ளது – புகையிரத மேலதிக பொதுமுகாமையாளர்

பொல்கஹவலயிலிருந்து இரத்மலானை வரை பயணிக்கும் புகையிரதம், வில்வத்த – மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரதக் கடவையினூடாகச் செல்லும் பாதையில் கன்டைனர் ஒன்றுடன் மோதியதில், மீரிகம – அம்பேபுஸ்ஸ புகையிரதப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது தனி வழிப் போக்குவரத்துப் பாதையாக திறக்கப்பட்டுள்ளது என்று புகையிரத மேலதிக பொதுமுகாமையாளர் வீ.எஸ். பொல்வத்தகே தெரிவித்தார். இந்த புகையிரத விபத்து தொடரபாக, இன்று (09) அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த விபத்து … Read more

மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நடைபவனி

மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு ஒழுங்குசெய்யப்பட்ட நடைபவனியை வரவேற்கும் நிகழ்வு (08) மதவாச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தின் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும் குறித்த நடைபவனிக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக மதவாச்சி பிரதேச செயலாளர் எம். சி. மலவிஅராச்சியின் ஆலோசனைக்கு இணங்க மற்றும் சேப் பௌன்டேசன் உதவு நிறுவனத்தின் ஆதரவுடன் இவ்வரவேற்பு நிகழ்வு மற்றும் கலாசார பறிமாற்ற நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சிரமங்களுக்கு உள்ளானவளுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்.

அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு வேலைத்திட்டத்துடன் உலக உணவுத் திட்டத்தினால் வவுனியா மாவட்டத்தில் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளான மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்ற நிகழ்வின் தொடர்ச்சியாக இன்று வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தின் மடுக்கந்தை, மயிலங்குளம் கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்களிற்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50 கிலோ அரிசி, 20 கிலோ பருப்பு, 5 லீற்றர் தேங்காய் எண்ணெய் … Read more

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

பாராளுமன்றத்தில் கடந்த மாதம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் கடந்த யூலை மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் 2023 ஏப்ரல் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூன் 21 … Read more

உலக சாரணர் ஜம்போரி தளத்தில் இருந்து இலங்கை சாரணர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ஆகஸ்ட் 09 ஆந் திகதி பிற்பகுதியில் கொரியக் குடியரசின் கரையைக் கடக்கவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ள கானுன் சூறாவளியைக் கருத்தில் கொண்டு, கொரியக் குடியரசில் 25வது உலக சாரணர் ஜம்போரியில் பங்கேற்கும் இலங்கை சாரணர் குழுவினர் ஆகஸ்ட் 08 ஆந் திகதி சேமன்ஜியம் ஜம்போரி தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்தக் குழுவினர் சியோலின் புறநகரில் உள்ள சியோனனில் உள்ள டாங்கூக் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டனர். தமது புதிய தங்குமிடத்திற்கு பாதுகாப்பாக சென்றடைந்த இலங்கை சாரணர்கள், சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளனர். … Read more

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொதுமக்களின் பிரச்சினைகள் முறைபாடுகளை உடனுக்குடன் தெரிவிக்க வசதி

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தத்தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியாத பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை மாவட்ட அரசாங்க அதிபருக்கு இலகுவான முறையில் தெரிவிப்பதற்கு மாவட்ட செயலகத்தினால் புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி. பத்மராஜாவின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் பொதுமக்களின் பிரச்சினைகள், முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக பதிவு செய்யும் வசதி மாவட்ட செயலக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலக இணையத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள இவ்வசதியினை அணுகுவதற்காக … Read more

ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன

கடந்த 5 வருடத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள வருடாந்த வட்டி இலாபத்தைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் 4 வருடங்களுக்குள் பங்களிப்பு நிதி (சந்தாப் பணம்) மூலம் கிடைக்கும் வருடாந்த வட்டி வீதம் குறைந்தபட்சம் 9 வீதமாக இருக்க வேண்டும் என்று 1985 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் திருத்தப்படும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அதற்காக நிதியமைச்சர் என்ற வகையில் … Read more

இணக்க அரசியல் என்பது பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாக இருக்க வேண்டும் – தொல்லியல் திணைக்களம் குறித்து அமைச்சர் டக்ளஸ்

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியிற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (07.08.2023) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சர், தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார். சுழிபுரம், பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் … Read more

21ஆம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான பொருளாதார முறைமையே தேவை

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயல்பாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் பங்களிப்பை உச்ச அளவில் பெற வேண்டும் – ஜனாதிபதி. காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான பொருளாதார முறைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் விரைவான அபிவிருத்தியை அடைய முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக புதிய சட்டங்கள் கொண்டுவர வேண்டுமெனவும் தெரிவித்தார். கொழும்பு ஷங்ரில்லா … Read more

நாட்டின் சில இடங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட் 09 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இன்று (09) காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் … Read more