இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்க வேண்டும் –  வைத்தியர் தீபால் பெரேரா 

தற்கால அதிகரித்த வெப்பநிலை காரணமாக அதிகமான இயற்கை நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே  சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் இது தொடர்பாக நேற்று முன்தினம் (07) ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், பகல் வேலையில் வெப்பநிலை அதிகரிப்பபதால் சிறுவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். இவ்வெப்பநிலையின் போது அதிகமாக இயற்கையான நீர் ஆகாரங்களை சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என விசேட சிறுவர் வைத்திய நிபுணர் குறிப்பிட்டார்.  இளநீர், தேசிக்காய், தோடை, … Read more

எந்த மரக்கறி வகையும் இறக்குமதி செய்வதற்கு நான் அனுமதிக்கமாட்டேன் – விவசாய அமைச்சர் 

நாட்டில் உற்பத்தியாகும் மற்றும் உற்பத்தி செய்யக் கூடிய எவ்வித மரக்கறிகளும் இறக்குமதி செய்வதற்காக நான் அனுமதிப்பதில்லை. எமக்குப் போதுமான மரக்கறிகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால் எந்த விவசாயியும் அது தொடர்பாக அநாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லை” என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மாத்தளை வேரகொல்ல பிரதேசத்தில் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ள குரக்கன் செய்கையை மேற்பார்வை செய்யும் விஜயமொன்றை (05) மேற்கொண்டிருந்தார். இதன்போது மாத்தளை மாவட்டத்தில் நெற்செய்கை செய்ய முடியாத தரிசு நிலம் … Read more

LPL கிரிக்கெட் வீரர்கள் நான்கு பேருக்கு அபராதம்

தம்புள்ளை ஆரா மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையே கடந்த 5 ஆம் திகதி PICS மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, LPL நடத்தை விதிகளை மீறியதற்காக பின்வரும் வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. தம்புள்ளை ஆராவைச் சேர்ந்த ஹசன் அலிக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், LPL நடத்தை விதியின் 2.21 வது பிரிவின் கீழ் 1 குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. தம்புள்ளை ஆராவைச் சேர்ந்த குசல் மெண்டிஸுக்கு LPL நடத்தை விதியின் … Read more

ஓய்வை அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கையின் வலைப்பந்தாட்ட நட்சத்திரம் தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “இலங்கை வலைப்பந்தாட்டத்தில் வெற்றிக்கு நான் பல ஆண்டுகள் பங்காற்றியுள்ளேன். எனக்கு இப்போது 45 வயதாகிறது. ஆசியாவில் எந்த வீராங்கனையும் என் அளவுக்கு நீண்ட காலம் விளையாடியதில்லை. வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் பின்னர் இலங்கை வலைப்பந்தில் இருந்து ஓய்வு பெற நான் தீர்மானித்துள்ளேன்” என்று தர்ஜினி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டியில் சோபிக்கத் தவறிய இலங்கை அணி தொடரில் … Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும்  அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் கருத்திற்கொண்டு அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில்  இன்று (08) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.    

பராமரிப்புத் தொழிலுக்காக  22 தொழிலாளர்களுக்கு விமான பயணச்சீட்டு

இஸ்ரேலில் பராமரிப்புத் தொழிலுக்காக தகுதிபெற்ற 22 ஊழியர்களுக்கு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இன்று விமான பயணச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதுடன், இந்த ஆண்டு 241 பேர் இஸ்ரேலில் பராமரிப்பு தொழிலுக்காக  அனுப்பப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் இஸ்ரேலில் பராமரிப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 241. இதில் 33 ஆண் தொழிலாளர்களும் 208 பெண் தொழிலாளர்களும் அடங்குகின்றனர். ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தலா 13 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டதுடன், மார்ச் மாதம் 12 தொழிலாளர்கள் … Read more

அனைத்து அரச துறை நிறுவனங்களின் முறைகேடுகளையும் நிறுத்துவதற்கான ஒரே வழி; அவற்றை டிஜிட்டல் மயப்படுத்துவதாகும்

அனைத்து அரச துறை நிறுவனங்களிலும் இடம்பெறும் திருட்டு, முறைகேடுகள், ஊழல், மோசடிகளை தடுப்பதற்கு அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதே ஒரே வழி என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய கடன் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், … Read more

விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கி தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை

நாட்டின் விவசாயிகளுக்கு நீர் மற்றும் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும், நாட்டின் நலனுக்காக எடுக்க வேண்டிய எந்த முடிவையும் எடுக்க அரசாங்கம் தயங்காது எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எரிசக்தி அமைச்சர் இதனை தெரிவித்தார். சமனல குளம் நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு விவசாய தேவைகளுக்காக நீர் திறப்பு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகபட்ச கொள்ளளவிற்கு நீர் திறந்து விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சமனல … Read more

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, நீதிபதி சோபித ராஜகருணா நேற்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.

13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடும்போக்கு அரசியல்வாதிகளின் கருத்துக்களால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை

பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதல் மூலம் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். 13ஆவது திருத்தம் ஊடாக வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார் – கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கிராமிய வீதி அபிவிருத்திக்கான … Read more