கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் சபாநாயகரைச் சந்தித்தார்

கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மியோன் லீ (Miyon LEE) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (03) சந்தித்தார்.   பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இலங்கையின் விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்திகளுக்கு ஆதரவளிப்பது பற்றிய தூதுவர் வலியுறுத்தினார். அத்துடன், KOICA மூலம் வழங்கப்படும் ஆதரவுகள், கல்விக்கான ஆதரவுகள், போக்குவரத்து, நீர் முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் போன்று கிராமப்புற அபிவிருத்தி என்பன தொடர்பிலும் … Read more

இலங்கை, COP 28 இல் காலநிலை நியாய மன்றத்தை(Climate Justice Forum) ஆரம்பிக்கத் தயாராக உள்ளது

05 ஆவது ஆசிய பசுபிக் மன்றத்தை இலங்கையில் நடத்தத் திட்டம்.அடுத்த இரண்டு வாரங்களில் பல பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும்.மின்சாரம் மற்றும் இரத்திரனியல் கழிவு முகாமைத்துவத்துக்கான தேசிய கொள்கை – சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட். எதிர்வரும் 2023 ஐ.நா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டின் (COP 28) 28 ஆவது கூட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான காலநிலை நியாய மன்றத்தை (Climate Justice Forum) இலங்கை ஆரம்பிக்கத் தயாராக உள்ளது என்று … Read more

கிழக்கு மாகாண விவசாய நிலங்களை பார்வையிட்டார் பிரதமர்

திருகோணமலை விவசாய நிலங்களை பார்வையிட்டு சேருநுவர, காவந்திஸ்ஸபுர கிராமத்தில் வயல் வெளியில் அறுவடையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் பிரதமர் (05) கலந்துரையாடியுள்ளார். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தித் திட்டமான ’புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் தினேஷ் குணவர்தன, கிழக்கு மாகாணத்தில் உள்ள பல விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார். காவந்திஸ்ஸபுர விவசாய நிலத்திற்கு சென்றிருந்த போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருகோணமலை … Read more

இதன் பின்னர் வருடத்திற்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் – கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் வருடத்திற்கு ஒரு தவணைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் பாடசாலையில் உள்ள மூன்று தவணைகளுக்கும் சேர்த்து பொதுவாக ஒரு பாடத்திற்கு ஒரு பாட புத்தகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஒவ்வொரு தவணைக்கும் தனித்தனியாக ஒரு புத்தகம் வீதம், வருடத்துக்கு மூன்று புத்தகங்கள் ஒரு பாடத்திற்காக வழங்கப்படும் நடைமுறையை கொண்டு வர உள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் … Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை, நிலாவேளி மற்றும் லங்காபடுன கடற்பகுதியில் 2023 ஓகஸ்ட் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது வெடிபொருட்கள் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத இரவு நேர சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்து (10) பேர், மூன்று (03) டிங்கி படகுகள் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல் அட்டைகள் நூற்று பதினாறுடன் (116) சுழியோடி உபகரணங்களும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு … Read more

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 75 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் புத்தளம், சேரக்குளிய கடற்கரைப் பகுதியில் (2023 ஆகஸ்ட் 4) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில் எழுபத்தைந்து (75) கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார். கடல் வழிகளாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் … Read more

திருகோணமலை ஜெயநகர் பகுதியில் வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை ஜெயநகர் மற்றும் பொடுவகட்டு கடற்பகுதியில் 2023 ஜூலை 31 மற்றும் 2023 ஆகஸ்ட் 03 ஆம் திகதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது 05 வர்த்தக வெடி குச்சிகள், பதினான்கு (14) வெடிபொருட்கள் மற்றும் பதினேழு (17) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களுடன் சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். வெடிமருந்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் … Read more

இராணுவ சேவை வனிதையரால் நிவாரணப் பொதிகள் மற்றும் தயிர் உற்பத்திக்கான குளிர்சாதனப் பெட்டிகள்

இராணுவத் தலைமையகத்தின் உள்ள இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவு இராணுவத் தலைமையகத்தில் பணிபுரியும் இராணுவ வீரர்களுக்கு 100 உலர் உணவுப் பொதிகளை கடந்த வெள்ளிக்கிழமை (ஒகஸ்ட் 04) இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கியது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர். இந் நிகழ்வு … Read more

காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டம் –  அமைச்சர் டக்ளஸ் 

காலத்தின் தேவைக்கு ஏற்றவகையில், கடற்றொழில் சார்ந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் ஆகியவற்றினை மெருகேற்றுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.   குறித்த விடயம் தொடர்பான முன்னேற்றங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த ஆகியோருடன் கலந்துரையாடல் இன்று (7) இடம்பெற்றுள்ளது.

உடவலவ நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் 1% வரை குறைவடைந்துள்ளது

இருபது வருடங்களுக்குப் பின்னர் உடவலவ நீர்த் தேக்கத்தின் நீரேந்துப் பிரதேசங்களுக்கு செல்வாக்குச் செலுத்தியுள்ளது. கடும் வரட்சிக் காலநிலை காரணமாக உடவலவ நீர்த் தேக்கததில் மேலும் நீரை வழங்குவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உடவலவ நீர்த் தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியிலாளர், சுஜீவ குணசேகர தெரிவித்தார். இரத்தினபுரி, மொனராகலை மற்றும் ஹம்பந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் குடிநீர் மற்றும் விவசாய செயற்பாடுகளுக்காக உடவலவ நீர்த் தேக்கத்திலிருந்தே பிரதானமாக நீர் வழங்கப்படுகிறது. உடவலவ நீர்த்தேக்கத்தில் 217,440 அடி ஏக்கர் பரப்பில் பூரண … Read more