இதன் பின்னர் வருடத்திற்கு ஒரு தவனைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் – கல்வி அமைச்சர்

அடுத்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் வருடத்திற்கு ஒரு தவனைப் பரீட்சை மாத்திரமே நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் பாடசாலையில் உள்ள மூன்று தவணைகளுக்கும் சேர்த்து பொதுவாக ஒரு பாடத்திற்கு ஒரு பாட புத்தகம் வழங்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி ஒவ்வொரு தவணைக்கும் தனித்தனியாக ஒரு புத்தகம் வீதம், வருடத்துக்கு மூன்று புத்தகங்கள் ஒரு பாடத்திற்காக வழங்கப்படும் நடைமுறையை கொண்டு வர உள்ளோம். இதன் மூலம் மாணவர்களின் … Read more

பாராளுமன்றம் நாளை முதல் 11 ஆம் திகதி வரை கூடும்

• 2023 அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நாளை 08 ஆம் திகதி • பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதம் 09 ஆம் திகதி • பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் 10 ஆம் திகதி   பாராளுமன்றம் நாளை 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளதுடன், இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 … Read more

தரமான படைப்புக்களை உலகிற்கு வழங்கிய இந்நாட்டின் கடந்தகால கட்டிடக் கலைகளின் தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்

  எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்த நிர்மாணிப்புக்கள் அவசியம் – ஜனாதிபதி. இலங்கையை உலக அரங்கிற்கு கொண்டுச் சென்ற பிரசித்தமான நிர்மாணங்களான ருவன்வெலிசாய, அபயகிரிய, ஜேதவனாராமய உள்ளிட்ட நிர்மாணங்கள் ஊடாக இந்நாட்டு கலைஞர்கள் உருவாக்கிய தரத்தை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல், எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உகந்தான கட்டிட நிர்மாணங்கள் இலங்கைக்கு அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். … Read more

அரச நிதி நிர்வாகம் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான விடயமாகும்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றம் தவிர்ந்த வேறு எவருடைய பரிந்துரைகளையும் நிபந்தனைகளையும் ஏற்கப்போவதில்லை -ஜனாதிபதி. அரச நிதி நிர்வாகம் தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்திடம் மட்டுமே உள்ளது. எனவே, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தை தவிர்ந்த வேறு எவருடையதும் யோசனைகளையோ நிபந்தனைகளையோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை உருவாக்குவதாக ஏற்றுக்கொண்ட சவாலை அவ்வண்ணமே நிறைவேற்றுவதாகவும் … Read more

13 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையும்  முன்வைக்குமாறு கட்சித் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் 15-08-2023 ஆம் திகதிக்கு முன்னதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுத்தருமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 26-07-2023 அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூட்டப்பட்டிருந்த சர்வகட்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களுக்கு அமைவாக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்

கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிரிட நடவடிக்கை – விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா. எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளும் வகையில் கைவிடப்பட்டுள்ள 11,000 ஏக்கர் நெல் வயல்களில் மீண்டும் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தெரிவித்தார். கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக கைவிடப்பட்டுள்ள நெல் வயல்களில் மீண்டும் பயிரிடும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும், இதற்காக அரசாங்கம் … Read more

துரிதப்படுத்தப்படும் இலங்கை தனித்துவ டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைத் திட்டம்

துரிதப்படுத்தப்படும் இலங்கை தனித்துவ டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைத் திட்டம்முற்பணமாக 450 மில்லியன் இந்திய ரூபா. நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய … Read more

சிலர் அஸ்வெசும மூலம் மோதலை உருவாக்க முயன்றனர் – பிரதமர் தினேஷ் குணவர்தன

காணிகள் தொடர்பான சட்டத்தை மாற்றி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நில அளவை அதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது… மொனராகலை மாவட்ட செயலகத்தில் (03) இடம்பெற்ற “புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்“ தேசிய ஒருங்கிணைப்பு பங்கேற்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்- நாம் நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்தமை பற்றி அனைவருக்கும் தெரியும். இலங்கை பாரிய சர்வதேச பிரச்சினைக்கு முகம்கொடுத்தது. நெருக்கடியை வெற்றிகொள்ள சர்வதேச ஆதரவும் நட்புறவும் எமக்குத் … Read more

ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ பிரதமரை சந்தித்தார்.

ரதுகல ஆதிவாசிகள் தலைவர் சுதா வன்னிலஎத்தோ (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொனராகலையில் சந்தித்தார். காட்டின் இயற்கை சூழலில் உற்பத்தியாகும் தேன், பழங்கள், மருந்துமூலிகைகள், நன்னீர் மீன்வளர்ப்பு போன்ற வருமான மூலங்கள் சில சட்டங்கள் மற்றும் பல காரணங்களால் முடங்கியுள்ளமை குறித்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வசதிகள் இல்லாமை குறித்தும் ஆதிவாசிகளின் தலைவர் பிரதமரிடம் தெரிவித்தார். ஊருவரிகே வன்னிலஎத்தோ தலைமையில்அனைத்து ஆதிவாசி குடியேற்றங்களின் தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து இந்தப் பிரச்னைகள் குறித்து விரிவான முறையில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக … Read more

வெளிநாட்டவர்களின் சட்டவிரோத இரத்தினக் கல் கொள்வனவால் அரசாங்கம் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்டமுடியவில்லை

சீன மற்றும் தாய்லாந்து நாட்டவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக குறைந்த விலையில் இந்நாட்டு இரத்தினக் கற்களைப் பெற்றுக்கொள்வதால் அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருமானத்தை ஈட்டுமுடியாத நிலை • மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும்போது விதிக்கப்படும் 2.5% சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு நடவடிக்கை – சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்;றிய துறைசார்; மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் சீனா மற்றும் தாய்லாந்து பிரஜைகள் இலங்கையில் மிகக் குறைந்த விலையில் இரத்தினக் கற்களை கொள்வனவு செய்வதற்கு சட்டவிரோதப் … Read more