பிரதமரின் பங்கேற்புடன் “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம்!!

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தனின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் … Read more

வவுனியாவில் குடிநீர் திட்டங்கள் திறந்து வைப்பு

வவுனியா மக்களின் சுத்தமான குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள நீர் திட்டங்கள் நேற்று (04) இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த தலைமையில் திறந்து வைக்கப்பட்டன. வவுனியா காத்தார் சின்னக்குளம் பகுதியில் நீர் திட்டங்களை திறந்து வைத்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் திரு.சனத் நிஷாந்த, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் சுத்தமான குடிநீரை இலவசமாக வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமைப் பணியாக மாறியுள்ளது. இந்த திட்டங்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் தொகை செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் … Read more

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

விசேட படையணியின் பிரிகேடியர் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய தளபதியாக 2023 ஜூலை 20 கடமைகளைப் பொறுப்பேற்றார். புதிய தளபதிக்கு இராணுவ கல்வியற் கல்லூரியினால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நினைவுதூபியில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அணிவகுப்பு மரியாதையின் பின்னர் பிரிகேடியர் எம்டிஐ மஹாலேகம் டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ‘பிரித்’ … Read more

இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வாருங்கள

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பங்களிக்குமாறு இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்திடம் கோரிக்கை விடுத்தது. நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியப் பிரதிநிதிகள், நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை அண்மையில் (28) சந்தித்தபோதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி … Read more

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் நியூசிலாந்து ஆய்வுப் பயணத்துக்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லை

இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் நியூசிலாந்து ஆய்வுப் பயணத்துக்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லையென பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். இந்த ஆய்வுப் பயணம் இரண்டரை வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தாது அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வு என அவர் குறிப்பிட்டார். குறிப்பாக இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் இந்நாட்டுப் பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றி வருவதாகவும், இந்தப் பணிகளை … Read more

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் சிறார்களின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அவரது அமைச்சில் இடம்பெற்றுள்ளது. ‘சேவ் த சில்றன்’ (SAVE THE CHILDREN) அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா, பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி காந்தி சௌந்தர்ராஜன், எனது ஆலோசகர் … Read more

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஈரானுக்குப் பயணம்

ஈரானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொஸேன் அமீர் அப்துல்லாஹியன் விடுத்த அழைப்பிற்கு இணங்க, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எம். யு. எம். அலி சப்ரி இன்று (4) தொடக்கம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்கின்றார். அமைச்சர் இச்சுற்றுப்பயணத்தின் போது ஈரான் ஜனாதிபதி கலாநிதி ஸெயித் ஈப்ராஹிம் ரயிஸியை சந்திக்கவுள்ளதுடன், இருநாடுகளுக்கிடையில் காணப்படும் நெருக்கமான உறவை தொடர்ந்தும் வலுப்படுத்தும் நோக்கில் ஈரானின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹொஸேன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட … Read more

தேசிய விளையாட்டு சபைக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள்

தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்களாக, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ஆர்.ஏ.யு.பி. ராஜபக்சே மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஷெமால் பெர்னாண்டோ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இலங்கையில் விளையாட்டின் மேம்பாடு மற்றும் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்குவது தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்களின் பிரதான பொறுப்புகளில் ஒன்றாகும்.

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எவ்வித இடமுமில்லை எனவும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி புரியும் எந்தவிதமான செயல்கள் தொடர்பாக இருக்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார். அமைச்சர், துருக்கி நாட்டுக்கான சுற்றுப் பயணத்தின் போது துருக்கியின் பாதுகாப்பு அமைச்சர் யாஸர் குலரை சந்தித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மற்றும் அமைச்சர் குலர் இடையே பல்வேறு கட்டங்களில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரித்தல் மற்றும் … Read more

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் கைது

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் நேற்று (3) காலை மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குறித்த கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்ட மை தெரிய வந்துள்ளது. -தற்போது கைது செய்யப்பட்ட பல்லவராயன் … Read more