எல்.பி.எல் போட்டி சுற்றுலாத்துறைக்கு பெரும் ஆதரவை அளிக்கிறது

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் எல்.பி.எல் போட்டிகள் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சர்வதேசளவில் பங்களிப்பை வழங்கி வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எல்.பி.எல் லீக்கின் முதல் கட்டமான கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் (02) நடைபெற்ற தம்புள்ளை ஆவுரா மற்றும் யாழ் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை பார்வையிட வருகை தந்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ‘இந்தப் போட்டி மிகவும் நன்றாக இருக்கிறது, இது நான்காவது கட்டம். இந்த முறை நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூழாமுறிப்பு,கற்ச்சிலைமடு,காதலியார் சம்மளங்குளம்,ஒலுமடு ஆகிய கிராமங்களிற்கு சுத்தமான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (03) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கெளரவ திரு.பிரசன்ன ரணத்துங்க அவர்களினால் கையளிக்கப்பட்டது. சுத்தமான குடிநீர் இல்லாது மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். அத்தோடு தீரா நோயினாலும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையினைப் போக்கிட சிறந்த செயற்றிட்டமாக நனோ நீர் சுத்திகரிப்பு நிலையம் கையளிக்கப்பட்டது. மேலும் இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவாட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கிராமிய பொருளாதார இராஜாங்க … Read more

“அஸ்வெசும” என்பது சமுர்த்தி வேலைத் திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல

அஸ்வெசும நிவாரணம் பெற முடியாத 393,094 குடும்பங்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்திக் கொடுப்பனவு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க. “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது சமுர்த்திப் கொடுப்பனவு பெற்று வரும் 393,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள் … Read more

பேஸ்பால் போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்றது கடற்படை ஆண்கள் அணி

2023 ஜூலை 25 முதல் 28 ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற 12வது பாதுகாப்பு சேவைகள் பேஸ்பால் போட்டியில் கடற்படை பேஸ்பால் அணி ஆண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றது. அதன்படி, இலங்கை இராணுவ அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் திறமையாக விளையாடிய கடற்படை அணி 12/5 புள்ளிகள் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றதுடன், இறுதிப் போட்டியில் கடற்படை வீர்ர் வை.டி.புஸ்பகுமார 2 புள்ளிகளையும், பி.எச்.புஷ்பசிறி 03 புள்ளிகளையும், ஐ.எச்.டி.லால் 03 புள்ளிகளையும், எச்.ஏ.ஏ.சாந்த … Read more

கிரேட் வெஸ்டர்ன் மலைகளில் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை லிந்துலை பொலிஸ் நிலையத்தின் வேண்டுகோளுக்கிணங்க 112 வது காலாட் பிரிகேடின் 3 வது இலங்கை சிங்கப் படையினர் (2) அதிகாலை பிரபல கிரேட் வெஸ்டர்ன் மலைப்பகுதிக்கு சென்று மலையில் இருந்து விழுந்து பல மணிநேரம் அல்லது நாட்களுக்கு முன்பு இறந்த இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலத்தை மீட்டனர். சடலத்தை மீட்ட படையினர் அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்று லிந்துலை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகளுடன் நுவரெலியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இதே சந்தர்ப்பத்தில் மீட்பு பணிக்குச் செல்லும் வழியில் … Read more

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் பரிசீலிப்பு தொடர்பான கருத்தமர்வு!

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிப்பதற்கான வழிகாட்டல் செயலமர்வு (02) புதன்கிழமை இடம்பெற்றது. குறித்த செயலமர்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நலன்புரி நன்மைகள் சபையினால் தகுதியான நபர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தன.இந்நிலையில், மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் முன்னாயத்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்காக பிரதேச … Read more

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பிரதமர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்  தொடர்பான விஷேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (02) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதமர் அலுவலகத்தின் உயர் மட்ட அதிகாரிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்  தலைவரின் தனிப்பட்ட செயலாளர் தஜீவரன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் இணைப்பாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்  என பலர் கலந்துகொண்டனர். பிரதமரின் வருகையின் போது, மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு … Read more

சுகாதார சேவைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறையை ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்

WHO தரநிலை அளவுகோல்களுக்கு அமைய ஆய்வக வசதிகளை நிறுவுவதற்கான சட்டமூலம் தயாரிக்க ஆலோசனை.மருத்துவப் பொருட்களுக்காக ரூ. 30 பில்லியன் மேலதிக ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம். மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள்தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத் தவிர்த்து, சிறந்த சுகாதார சேவையையும், பொது நலனையும் உறுதி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள … Read more

காணி உரிமை இல்லாது மகாவலி காணிகளில் வசிக்கும் 15,000 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள்

ஏற்கனவே 20,000 உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன – விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க. மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும் 15,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் … Read more

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் வழி வகைகள் பற்றிய கலந்துரையாடல்

பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக தலைமையில் கலந்துரையாடல் (31) இடம்பெற்றுள்ளது. புதிய வரி கோப்புக்களை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கத்தினால் இலக்கொன்று வழங்கப்பட்டுள்ளபோதும், இதனை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் தற்பொழுது பயன்படுத்தப்படும் RAMIS கணினிக் கட்டமைப்பைப் பயன்படுத்திப் புதிய வரிக் கோப்புக்களை ஆரம்பிப்பதில் பாரிய கால … Read more