கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் மீண்டும் வலியுறுத்தல்

பல்கலைக்கழகமும் அதன் பிரிவுகளும் பலப்படுத்தப்படுவதுடன், வரக்கூடிய உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்திசெய்யும்.சகல வசதிகளைக் கொண்ட கெடட் மெஸ் மற்றும் தங்குமிட வசதிகள் தெற்கு வளாகத்தில் திறந்து வைப்புசுற்றாடல் மற்றும் தொழில்துறை தொடர்பான ஜேர்னல் ஒப் பில்ட் என்வைமென்ட்’ மற்றும் ‘நிலையான எதிர்காலத்திற்கான தரம் என்ற சஞ்சிகைகள் வெளியிடப்பட்டது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஜூலை 28) மீண்டும் வலியுறுத்தினார். “இந்த … Read more

நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்புநாட்டில் வர்த்தக சூழலை எளிதாக்க சட்டம்.நிர்வாகச் செயற்பாடுகளுக்கு பொதுச் சேவை முகாமைத்துவக் கொள்கை அவசியம் – வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பாராளுமன்றக் குழுவின் தலைவர் மதுர விதானகே. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் … Read more

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். இதுவரையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சுமார் 11,000 முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பணியாளர்கள் தட்டுப்பாடு காணப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அதற்குரிய தீர்வுகளை விரைவில் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன்போது, அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித … Read more

ஜப்பான் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதியை சந்தித்தார்

ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு இரு தரப்பின் அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்பட்டது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஜப்பான் வழங்கும் ஆதரவுக்கு ஜனாதிபதி பாராட்டு.இலகு ரயில் திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த அவதானம்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) நேற்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து இந்தக் கலந்துரையாடல் … Read more

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் அவர்கள் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் நேற்று (29.07.2023) நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றேன். … Read more

மனித எச்சங்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள், ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் (28.07.2023) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் இவ்வாறு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராம மட்டத்திலான விழிப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வு, போதைப் பொருள் பயன்பாடு உட்பட்ட சமூக விரோதச் … Read more

போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த, பொறுப்பான நிறுவனங்களை அழைத்து கலந்துரையாட தீர்மானம்

போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்குமான முதற்கட்டமாக அது தொடர்பான நாட்டின் தற்போதைய நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்வது முக்கியமானது என்பதால் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு ‘நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்’ தீர்மானிக்கப்பட்டது. அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் குழுவின் தலைவர் அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் தலைமையில் (27) … Read more

உலக சாரணர் ஜம்போரியில் பங்கேற்கவுள்ள சாரணர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னம் ஜனாதிபதி தலைமையில் வெளியீடு. தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் 25ஆவது உலக சாரணர் ஜம்போரியில் கலந்து கொள்ளும் இலங்கை அணிக்கு நேற்று (28) முற்பகல் இலங்கையின் பிரதம சாரணரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக தேசியக் கொடி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ சின்னமும் இதன்போது வெளியிடப்பட்டது. 25ஆவது உலக சாரணர் ஜம்போரி 2023 ஓகஸ்ட் 1 முதல் … Read more

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்த

ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு அவசியம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ‍13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஜனாதிபதி மேற்கொள்ளும் முயற்சிகள் பிரபல்யமற்றதாக இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்காக எடுக்கப்பட்ட நம்பிக்கையான தீர்மானம் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் எதிர்பார்த்த புதிய அரசியல் பயணத்தின் ஆரம்பமாக இந்த முயற்சிகள் பெரும் சவாலுடன் எடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் … Read more

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயம்

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதியளிப்பு. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கும் பிரான்ஸ் ஆதரவு.பல புதிய துறைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராய்வு.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி … Read more