அமைச்சர் அமைச்சர் ரோஷன் ரணசிங்க சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கண்காணிப்பு விஜயம்

நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரோஷன் ரணசிங்க (27) சேனாநாயக்க சமுத்திரத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். பிரதானமாக சமுத்திரத்திற்கு அருகில் காணப்படும் டி. எஸ். சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், அம்பாறை மாவட்டத்தின் நெல் விவசாயத்திற்கு நீர் விநியோகிக்கும் பிரதான சமுத்திரமான இதன் தற்போதைய நிலை தொடர்பாக அம்பாறை மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் அமைச்சர் முன்னிலையில் தெளிவு படுத்தினார். இதன் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க, நீர்ப்பாசன பணிப்பாளர் … Read more

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய அதிகாரிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர். சந்தைப் பெறுமதி மற்றும் செயற்திறனை அடிப்படையாக கொண்ட சம்பள கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல், புத்திஜீவிகள் வெளியேற்றத்தை மட்டுப்பத்தல் மற்றும் வைத்தியர்களுக்கான கொடுப்பனவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு மேற்படி அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டதோடு, அது தொடர்பிலான பரிந்துரைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இந்நாட்டின் சுகாதார துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய உடனடி மறுசீரமைப்புக்கள் … Read more

சுதந்திர இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தியுள்ளார்

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும் – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய. சுதந்திர இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கை தற்போதைய காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார். உலக நாடுகள் அனைத்துடனும் நெருக்கமாகச் செயற்பட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு பல அபிவிருத்தி நன்மைகள் கிடைக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி … Read more

13 ஆவது திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதே தனது நோக்கம்

மாகாண சபை முறையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாயின் தற்போதுள்ள குறைபாடுகளை சீர்செய்ய வேண்டும். தனக்கு யோசனைகளை முன்வைக்க மட்டுமே முடியும். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு … Read more

13இனை செயற்படுத்துவது தொடர்பில் புதிய கோணத்தில் பார்ப்போம். – சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் அய்வன் 

நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனின் சாதி, மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை செயற்படுத்த வேண்டும் என சிரேஷ்ட ஊடவியலாளர் விக்டர் அய்வன் அவர்கள் தெரிவித்தார். நேற்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  அதிகாரப் பகிர்வு குறித்து அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும். கலந்தாலோசித்து, விவாதித்தே ஒரு நல்ல தீர்மானத்தினை எடுக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது நாட்டினை பிரிப்பதல்ல. அது பொய்யான கூற்றாகும். … Read more

இலங்கையில் புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க கொரியா திட்டம்

தற்போதைய திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு மேலதிகமாக, இலங்கையில் பல புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தமது நாடு நடவடிக்கை எடுத்து வருவதாக கொரியக் குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ தெரிவித்தார். கொரிய குடியரசின் தூதுவர் திருமதி மியோன் லீ அவர்களுக்கும் பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது. நீர் சுத்திகரிப்பு, சுகாதாரம், கழிவுகளை அகற்றும் முறைமைகள் மற்றும் உலர் வலய விவசாயம் … Read more

சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் கல்கத்தாவில் தேசிய ஹோமியோபதி நிறுவனத்திற்கு விஜயம்

இந்தியாவின் மேற்கு பங்காளத்தில், கல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனத்திற்கு சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜயகொடி அங்குள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக விஜயம் மேற்கொண்டார். ஒரு நாளைக்கு 3000 பேர் அளவில் ஹோமியோபதி சிகிச்சை வழங்கப்படும்  இந்த வைத்தியசாலையில் புற்றுநோய், சிறுநீரக நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன் அதற்காக மக்கள் மத்தியில் உணரப்பட்டுள்ளது.   இத்தேசிய ஹோமியோபதி நிறுவனத்தில் நாட்டின் சுதேச வைத்திய அமைச்சர் ஒருவர் மேற்பார்வை … Read more

அஸ்வெசும தொடர்பான பிரச்சினைகள் பிரதமரின் கவனத்திற்கு…

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் போன்றோருக்கான அளவுகோல்களை அவ்வாறே நடைமுறைப்படுத்துவது குறித்தும், தற்போது எழுந்துள்ள ஏனைய பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, அஸ்வெசும தலைவர் பி. விஜேரத்ன … Read more

24 கிலோ கிராமுக்கும் அதிகமான மான் இறைச்சியுடன் 03 பேர் கைது

பானம சாஸ்திரவேளி பகுதியில் (25) மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது 24 கிலோவிற்கும் அதிகமான மான் இறைச்சியுடன் மூவர் (03) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தின் கடற்படையினர் (25) பானம சாஸ்திரவேளி பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மூன்று (03) நபர்கள் அப்பகுதியில் தங்கியிருந்ததை அவதானித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து 24 கிலோ 300 கிராம் மான் இறைச்சி … Read more

சில அவ்வப்போது மாவட்டங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஜூலை 26 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 26 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் … Read more