ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இலங்கையின் நிதி தொடர்பான சவால்களை முறியடிப்பதற்கும் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் கடன் மறுசீரமைப்பிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை வழங்குவதாக மார்க் ஆன்ட்ரே தெரிவித்தார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத் திட்டங்களை ஜனாதிபதி ரணில் … Read more

சுமார் 606 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் கல்பிட்டி தடாகத்திற்குச் சொந்தமான மட்டத்தீவு அண்மித்த பகுதியில் 2023 ஜூலை 24 ஆம் திகதி இரவு மெற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பகுதியில் மிதந்த 606 கிலோ கிராம் (ஈரமான எடை) பீடி இலைகளை கைப்பற்றினர். கடல் வழிகளாக மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடல்பகுதி மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, 2023 ஜூலை … Read more

விஷேட அதிரடிப் படைக்கு ஐ.நா. பணிகளுக்கான இராணுவத் தயாரிப்பு வாகனங்கள் 

இராணுவத்திற்கு ‘சாத்தியமில்லாதவை ஏதுமில்லை’ என்பதை நிருபிக்கும் வகையில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணியின் படையினர் நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கையின் பேரில் ஐ.நா பணிக்காக பயன்படுத்துவதற்கான இராணுவத்தினரினால் தயாரிக்கப்பட்ட 6 வாகனங்கள் விஷேட அதிரடி படையினருக்கு கையளிக்கப்பட்டன. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் முன் முயற்சியால் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி இரண்டு புதிய கவசப் … Read more

இ.போ.ச பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் சேவையில் இணைப்பு

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார். மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையில் … Read more

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ் , பூட்டான், இந்தியா, மியான்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 7 தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டணியாகும். வங்காள விரிகுடாவை ஒட்டிய தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையிலான தொடர்ச்சியான … Read more

வினைத்திறனான போக்குவரத்து சேவையை வழங்குதற்காக “ஈ-பேருந்து” மாதிரிவேலைத் திட்டம்

அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான வேகக் கட்டுப்பாட்டுக் கொள்கை. போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டுபிடிக்கத் திட்டம் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லஸந்த அழகியவன்ன. வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் “ஈ-பேருந்து” முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக … Read more

சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடல்! சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து யுவான் ஜியாஜூன் தலைமையிலான சீனத் தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, நாட்டிலுள்ள புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் … Read more

ஊழல் ஒழிப்புச் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இலங்கை சமூகம் சீரடையும்…

ஊழல் ஒழிப்புச் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இலங்கை சமூகம் சீர்டையும்; என்று தான் கருதுவதாகவும், அது நிலைத்திருப்பது நடைமுறைப்படுத்துவதனூடாகவே இடம்பெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர்ரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… அரச நிறுவனங்களினுள், ஊழல் மோசடி, முறைகேடுகள் புற்று நோயாகப் … Read more

எதிர்வரும் மாதங்களில் Visit Sri Lanka புதிய சுற்றுலாத் திட்டம் வெளியிடப்படும்

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே இலக்கு. சுற்றுலாத் துறையை மேம்படுத்துகையில் சமையற்கலை தொடர்பில் கூடுதல் கவனம்.சமையற்கலைப் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை.மறைந்த மெரில் ஜே பெர்னாண்டோவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு – ஜனாதிபதி.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான Visit Sri Lanka திட்டம் அடுத்த … Read more

இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன

• தரக்குறைவான மருந்துகள் எது என்பதற்கு வரைவிலக்கணம் இல்லாததால், தரக்குறைவான மருந்து என்பதை நிராகரிக்கிறோம் – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல • மருந்துகளை கொண்டுவரவில்லை என்றால், மருந்து கிடைக்காமல் மக்கள் உயிரிழப்பார்கள் – அமைச்சின் அதிகாரிகள் • பேராதனை சம்பவத்துடன் தொடர்புடைய 167,000 மருந்துகள் இவ்வருடம் பயன்படுத்தப்பட்டுள்ளன – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்தியக் கடனுதவி இல்லாத காலத்திலும் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் 80% மருந்துகள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் சுகாதார … Read more