பெருந்தோட்டம் மற்றும் விவசாயத்துறை தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமொன்று நிறுவப்படும்

பெருந்தோட்டத் துறையில் பெறுமதி கூட்டல் செயற்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது- பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன் ஆரம்ப … Read more

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் நேற்று (24) கலந்துரையாடல் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கடந்த சில மாதங்களாக செந்தில் தொண்டமானால் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அடிப்படையில் சுசில் பிரேமஜயந்த அவர்கள் கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த உதவும் பாடம் சார்ந்த 700 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு தேவையான அனுமதிகளை ஆளுநருக்கு வழங்கியுள்ளார். மேலும் … Read more

A11 வீதியின் சிறுபாலங்களை  விரைவில் அபிவிருத்தி நடவடிக்கை

பொலன்னறுவை மாவட்டத்தின், ஹபரண –  மட்டக்களப்பு A11 வீதியில் அவதானத்துடன் காணப்படும் இடமாக அடையாளம் காணப்பட்ட படுஓயா பாலம் உட்பட சிறிய பாலங்கள் சில போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தனது விசேட  அவதானத்திற்குக் கொண்டுவரப்பட்டது. 2019இல் ஆரம்பிக்கப்பட்ட  அபிவிருத்தி செயற்பாடுகள் இப்பாலத்தை நிருமாணிப்பதற்குப் பொறுப்பெடுத்த கம்பனி 2021 இல் மாத்திரம் ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டு அங்கு நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன. பொலன்னறுவை மன்னம்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்துத் தொடர்பான காரணங்களை … Read more

அரசியலுக்காகஅன்றி நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது

அரசாங்கம் அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவில்லை.நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இளம் தொழில் முயற்சியாளர்களின் அமைப்பு (YPO) அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சாகல ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை இளைஞர் சமூகம், நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்க முடியும்.ஆனால் அதனை அரசாங்கத்தின் கொள்கையாக மாற்ற … Read more

மகாவிகாரை அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதியினால் குழு நியமிப்பு

பெருமைமிக்க நாகரீகத்தையும் வரலாற்றையும் பெற்றிருக்கும் நாம், நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும். அநுராதபுர வரலாற்று பாரம்பரியத்தை பாதுகாக்க தனித்துவமான சட்டக் கட்டமைப்பு.பழைய பிரிவேனா கல்வி முறைக்கமைய மகா விகாரை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் -ஜனாதிபதி.மகா விகாரை அபிவிருத்தி திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து அனுராதபுரம் பூனிதபூமி அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகாவிகாரை அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பௌதீக திட்டமிடல் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் … Read more

முதலாவது சினொபெக் எரிபொருள் கப்பல் அடுத்த மாதம் நாட்டை வந்தடையும்

அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான விலை சூத்திரத்தின் கீழ் எரிபொருளுக்கென அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும். QR குறியீடு தொடர்பில் விரைவில் தீர்மானம் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க.சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான … Read more

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையாருடன் அமைச்சர் ஜீவன் சந்திப்பு…

இந்திய பயணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையாரை, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் டெல்லியில் உள்ள ராஸ்டிரபதி பவனில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, பாதுகாப்பு, கலாச்சார, உறவுகளை வலுப்படுத்து சம்மந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், இந்திய வம்சாவளி மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டன. இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், … Read more

இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் (JMSDF) பிரதிநிதிகள் குழுவொன்று (ஜூலை 21) வெள்ளிக்கிழமை பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோனை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். ரியர் அட்மிரல் நிஷியாமா தகஹிரோ தலைமையிலான குழுவினரை அமைச்சர் தென்னகோன் வரவேற்றதுடன் அவர்களுடன் சுமுகமான கலந்துரையாடலையும் மேற்கொண்டார். இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைக்கு வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக ஜப்பானிய கடற் படைக்கு அமைச்சர் தென்னக்கோன் இதன்போது நன்றி தெரிவித்தார். கடந்த காலங்களில் இலங்கைக்கு … Read more

தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருப்பதுடன் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் குறித்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் , தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய பிரதமரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்கும் போதே … Read more

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அபிவிருத்தி வாய்ப்புகளை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்

எந்தவொரு நாட்டுக்கும் தனியாக முன்னேற முடியாது. இரு தரப்பினருக்கும் பயன்கள் கிடைக்கும் வகையிலும், அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாகும் – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி.வளர்ந்து வரும் உலகின் மிகப்பெரிய பொருளாதாரப் பிராந்தியங்களில் ஒன்றான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது, உலகில் … Read more