நீர் கட்டண அதிகரிப்புத் தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கலந்துரையாடல்

இலங்கையின் நீர் வழங்கல் நடவடிக்கையின் நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதை நோக்காகக் கொண்டு நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் தலைமையில் (19) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் … Read more

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நேற்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்றையதினம் நடைபெற்றதுடன், விவாதம் முடிவடைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விஜித ஹேரத் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய இரண்டாவது மதிப்பீடு 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் நாமல்கம புகையிரத வீதியில் திருத்தப்பணி

வெலிகந்த மற்றும் பூனானிக்கு இடையில் நாமல்கம பாதையில் புகையிரத கடவைகள் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கை வருமாறு:

இலங்கையின் பொருளாதார மீட்சி செயன்முறை குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது – சீன தூதுவர்

புதிய அரசாங்கத்தின் முதல் வருடத்தில் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கான முயற்சிகளில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொன்க் தெரிவித்தார். இந்த வார ஆரம்பத்தில் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கு சீனா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு புத்தகப் பைகள், காகிதாதிகள், பாடசாலை சீருடைகளுக்கான துணிகள் மற்றும் கல்வி உபகரணங்களை அண்மையில் … Read more

சில இடங்களில் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஜூலை 21 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2023 ஜூலை 21 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு … Read more

இந்திய மீனவர்களின் அத்துமீறல் பற்றி பிரதமர் மோடியுடன் பேசுவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

ஜனாதிபதியுடனான இந்திய விஜயத்தின் போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் அவர்களின் இழுவை மடித்தொழில் முறை பற்றி இந்திய பிரதமர் மற்றும் உயரதிகாரிகளுடன் பிரஸ்தாபித்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தா தெரிவித்துள்ளளார். வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் நேற்று (19) அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் … Read more

“அஸ்வெசும” நலன்புரித் திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்ததுள்ள அவர், அந்த கொள்கைத் தீர்மானங்களை … Read more

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் மதிப்பீட்டு செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் இந்நாட்டின் அரச சேவையை மேம்படுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க, அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார். 2019- 2020 ஆம் ஆண்டுகளில் செயற்திறனை வெளிப்படுத்தியிருந்த 65 அரச நிறுவனங்களுக்கு தங்க மற்றும் வௌ்ளி விருதுகளை வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரதமர் … Read more

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்த நடவடிக்கை

பொருளாதார நெருக்கடியால் தொழில்களை இழந்தவர்களை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கான புதிய செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி குழு நியமிக்கப்ட்டது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையிலான மேற்படிச் செயற்குழுவின் ஏனைய அங்கத்தவர்களாக கல்வி அமைச்சு, நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, மீன்பிடித்துறை … Read more

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நேற்று (19) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. நேற்று இடம்பெற்ற சட்டமூலத்தின் குழு நிலையின் போது அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களு எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட ஒரு சில திருத்தங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ விஜேதாச ராஜபக்ஷவினால் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் ஜூன் 21 மற்றும் ஜூலை 6 ஆகிய இரண்டு தினங்களிலும் … Read more