மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்படும் சாரதி அனுமதி பத்திரம் தாற்காலிகமாக நிறுத்தம்

மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் சாரதி அனுமதி பாத்திரம் வழங்கும் நடைமுறை தாற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். நேற்று (19) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஆலோசனை சபையில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் எப்போதும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் செவிப்புலனற்றோருக்கு முன்னுரிமை வழங்குவதாக த் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த … Read more

யானை-மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை

காயமடைந்த “அக்போ” யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி. நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தின் ஊடாக இதற்கான தீர்வுகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி … Read more

பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இன்று (20) காலியில் நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கும் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்இ இன்று 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 312 ஓட்டங்களைப் பெற்றது. அங்கு … Read more

557 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 02 டிங்கி படகுகள் கைது

இலங்கை கடற்படையினர் (18) நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த களப்பு பகுதியூடாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐநூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றினர். இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை … Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு, நகர்கோவில் மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவில் சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 16 மீனவர்கள், நான்கு (04) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர … Read more

 பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஜூலை 20 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2023 ஜூலை 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் … Read more

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூலை 19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 19ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான … Read more

மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைகளுக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு

மலையக அபிவிருத்திப் பணிகளுக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க 22 பேர் அடங்கிய விசேட குழு. மலையக சமூகத்தின் 200 வருட நிறைவையிட்டு விசேட நிகழ்வுகள் – அமைச்சர் ஜீவன் தொண்டமான். மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைவதனை முன்னிட்டு … Read more

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பிரேரணை

அதை செயல்படுத்துவதா இல்லையா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் – தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும். வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் … Read more

ரஷ்ய குத்துச்சண்டை சம்மேளனத்திடமிருந்து இலங்கை வீரர்களுக்கு பயிற்சி மற்றும் நிதியுதவி

சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லெவ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (18) அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையில் குத்துச்சண்டை மற்றும் ஏனைய விளையாட்டுகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சித்து வரும் பிரதமர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சுக்கு சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் நன்றி தெரிவித்ததோடு, இலங்கையில் குத்துச்சண்டையை மேம்படுத்த ரஷ்ய குத்துச்சண்டை சம்மேளனம் ஆதரவளிக்கும் என்று உறுதியளித்தார். ரஷ்ய குத்துச்சண்டை சம்மேளனம் இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு பெருமளவான குத்துச்சண்டை கையுறைகளை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், … Read more