ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இலங்கை அணி நாடுதிரும்பல்

தாய்லாந் பெங்கொங்கில் திங்கட்கிழமை (17) மாலை நடந்து முடிந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி சாதனை படைத்த 8 இராணுவ வீரர்களை உள்ளடக்கிய 13 வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ தடகளப் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, கமாண்டோ பிரிகேட் தளபதியும் இலங்கை இராணுவ தடகளப் … Read more

பலஸ்தீன நிலை தொர்பாக அமைச்சர் டக்ளஸ் வருத்தம் 

பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர் குரல் எழுப்புவதற்கு எவரும் – எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும், “பலஸ்தீனத்துடனான எனது நேரடித் தொடர்புகள் 1978ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. எமது மக்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அக் காலத்தில் நானும் பலஸ்தீனம் சென்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலம். 1978ஆம் அங்கு சென்றிருந்த நான், பின்னர் பயிற்சிக்கென ஒரு குழுவினையும் அழைத்துக் கொண்டு, 1984ஆம் … Read more

ஆசிரியர் பற்றாக்குறை அடுத்த வருடத்தில் பூர்த்தி செய்ய நடவடிக்கை

மலையக பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையை அடுத்த வருடமளவில் பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எந்த சமூகத்திற்கும் கல்வித்துறையில் அசாதாரணம் இடம்பெறுவதற்கு இடமளிக்க அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட அமைச்சர், கொட்டகலப் பிரதேசத்திற்கு சுற்றுலா மேற்கொண்டு அந்தப் பிரதேசத்தை மேற்பார்வை செய்த போது இந்த தகவலை தான் வழங்கியதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.  நுவரெலிய மாவட்டத்தை அடிப்படையாகக் வைத்து பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை நிர்மாணிப்பது … Read more

வேற்றுக்கிரக வாசிகளிடம் தமிழர் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

இலங்ககைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் அரசியல் தரப்பினருக்கு நல்லதொரு பதிலை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் வேற்றுக்கிரக வாசிகள் தலையிட வேண்டும் என்று சக தமிழ் தலைமைகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(18) நடைபெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான விவாதம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், “மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கின்ற சர்வதேச ரீதியான … Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஜூலை 20 – 21ஆந் திகதிகளில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளும் கொன்சியூலர் உறவுகளை ஸ்தாபித்ததன் 75வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்திய ஜனாதிபதி ஸ்ரீமதி திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய இந்திய உயர் அதிகாரிகளுடன் பரஸ்பர நலன் … Read more

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள்

இலங்கை வைத்தியசாலை சேவைச் சபையின் பணிப்பாளர் ராஜகீய பண்டித ரஜவெல்லே சுபூதி தேரர் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பணித் திட்டத்தின் கீழ், வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை உட்பட அரச வைத்தியசாலைகளுக்கான வைத்தியசாலை உபகரணங்களை அடையாளமாக விநியோகிக்கும் நிகழ்வு (17) வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இந் நிகழ்வில் கலந்துகொண்டார். இதன்படி, இந்த சமூகப் பணித் திட்டத்தின் கீழ், இலங்கை வெலிசர கடற்படை பொது வைத்தியசாலை … Read more

நீர் மற்றும் வடிகாலமைப்பு கட்டணங்களை திருத்த அமைச்சரவை அனுமதி

நீர் மற்றும் வடிகாலமைப்பு கட்டணங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு:

புதிய சிறைச்சாலை நிர்வாக சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய சிறைச்சாலை நிர்வாக சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நீதியமைச்சரின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு:

இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இராஜதந்திர மட்டத்தில் எட்டுவதற்கு நடவடிக்கை…

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என … Read more

யாழ் சர்வதேச விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அனுமதி

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்காக அறவிடப்படும் விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அமைச்சரவை தீர்மானம் வருமாறு: