2023ஆம் ஆண்டில் 250 'சிசு செரிய' பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டம்…

2023ஆம் ஆண்டில் 250 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘சிசு செரிய பஸ் சேவை’ தொடர்பாக பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்திற்கு 10 சிசு செரிய பஸ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.  சிசு செரிய என்பது, அரசாங்கத்தின் … Read more

நாட்டின் கல்வித் துறை குறித்த சகல தகவல்களும் அடங்கிய தரவு முறையொன்றைப் பேணுதல் அவசியம்

இந்த நாட்டில் கல்வி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய தரவு அமைப்பை பராமரிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் கோபா குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் கல்வித்துறையில் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய தரவு அமைப்பை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவன்ன தலைமையில் கடந்த (07) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.கடந்த … Read more

10 வருடங்களுக்குப் பின்னர் சிறுபோகத்தில் 512,000 ஹெக்டெயாரில் பயிற்செய்கை

அதிக அறுவடையைப் பெற்றுக்கொடுக்க உதவிய விவசாயிகளுக்கு கௌரவம். நாடு பூராவும் உயர் தொழில்நுட்ப மாதிரி தோட்டங்கள். 2026 ஆம் ஆண்டிளவில் 60 மெட்ரிக் தொன் சோள விளைச்சல். அடுத்த 6 போகங்களில் நெல் விளைச்சல் இரட்டிப்பாக உயரும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயார் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் … Read more

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கை

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் ஊடாக சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஆகியவற்றுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு வெளிவிவகார அமைச்சு தனது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடிய சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. … Read more

சிலம்பத்தை ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை

கொட்டகலை சி.எல்.எப் வளாகத்திற்கு வருகை தந்த விளையாட்டுதுறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்தை இலங்கையில் ஒரு விளையாட்டாக அங்கீகாரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளர். இலங்கை சிலம்ப சம்மேளனம் மற்றும் இலங்கை பாரம்பரிய கலைகள் ஒன்றியத்தினரால் சி.எல்.எப் கேட்போர் கூடத்தில் சிலம்ப கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை பாராட்டிய அமைச்சர், சிலம்பத்தை ஒரு விளையாட்டாக அங்கீகாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதன்போது இளைஞர் … Read more

போலித் தேனுக்கு பதிலாக சுத்தமான தேன் பாணிகளை வழங்க நடவடிக்கை

சந்தையில் காணப்படுகின்ற “போலித் தேனுக்கு பதிலாக சுத்தமான தேன் பாணிகளை நுகர்வோருக்கு வழங்குதல்” என்ற குறிக்கோளில் கெபிதிகொல்லாவ கலவல கிராமத்தில் தேனி  பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றுள்ளது.  கெபிதிகொல்லாவ பிரதேச செயலகத்தின் கலவல 30 கிராமத்தின் மக்களுக்கு தேனி பெட்டி வழங்கல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சி அனுராதபுர மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தலைமையில்  (14) இடம்பெற்றது.   இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இம்முயற்சியானது முழு நாட்டிற்கும் முன்னுதாரணம் எனத் தெரிவித்தார். அவ்வாறே இந்நிகழ்ச்சித் … Read more

சக இனங்களை எதிர் நிலைப்படுத்தும் அரசியலால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை 

வாக்கு வேட்டைக்காக இனத்துவ நிலைப்பட்டு மக்களை சிந்திக்கத் தூண்டுவதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சரும் யாழ் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏ32 பிரதான வீதியில் பல்லவராயன் கட்டு வேரவில் வரையான வீதி புனரமைப்புக்காக நேற்று (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமது பல்வேறு தேவைகளுக்காக இவ்வீதியை நாளாந்தம் பயன்படுத்தும் கிராஞ்சி, வலைப்பாடு … Read more

வடக்கு இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

வட மாகாணத்திலுள்ள அனைத்து இளைஞர் யுவதிகளுக்குமான பொன்னான வாய்ப்பொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் என கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான க்லோகல் பெயார் (Glocal Fair) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் குறைவாக இருந்ததுடன் அவற்றுக்காக பண விரைவு மற்றும் ஏமாற்றம் போன்றவற்றையும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது ஆரம்பித்துள்ள வேலைவாய்ப்புக்களில் … Read more

ஆசிய அஞ்சலோட்டப் போட்டியில் இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கம்

பேங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை அணி (16) 400 × 4 (ஆண்கள்) அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனையை படைத்துள்ளது. அணியில் 4 ஓட்ட வீரர்களில் 2 (தொ) வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சார்ஜன் எச்கேகே குமாரகே, 6 வது இலங்கை பீரங்கி படையணியின் பொம்பார்டியர் எஸ்ஏ தர்ஷன, 2 (தொ) வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் … Read more

இவ்வருட இறுதிக்குள் தபால் துறையை நவீனமயப்படுத்த புதிய சட்டமூலம்

தபால்துறை நவீனமயமாக்கல் பணிக்கு 10 பில்லியன் ரூபாய். தபால்துறை தனியார் மயப்படுத்தபட மாட்டாது – வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார. தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். தனியார் மற்றும் அரச துறையின் கூட்டுத் திட்டமாக 10 பில்லியன் ரூபா செலவில் இந்த நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தபால் திணைக்களம் எந்த வகையிலும் தனியார் … Read more