ஆப்கானிஸ்தான் ஏ அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற வளர்ந்துவரும் ஆசியக்கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணி தோல்வியடைந்துள்ளது. கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஏ அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38.5 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு … Read more

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க (15) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்கவின் மூத்த புதல்வரான மேஜர் ஜெனரல் வனசிங்க முன்னர் இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளுக்கு பல தடவைகள் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூலை 16 ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 15 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் … Read more

டென்மார்க் சுற்றுலாப் பயணியை தேடும் நடவடிக்கiயில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் பௌரவிப்பு…

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அலகல்ல மலைத்தொடருக்கு அருகில் சடலமாக காணப்பட்ட காணாமல் போன டென்மார்க் சுற்றுலாப் பயணியை தேடும் நடவடிக்கையில் அயராது பங்குபற்றிய 11 வது காலாட் படைப்பிரிவின் ஐந்து இராணுவ வீரர்களின் விதிவிலக்கான கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நேற்று (15) காலை இராணுவ தலைமையகத்திற்கு அழைத்து பாராட்டினார். தேடுதல் நடவடிக்கை மற்றும் பயணத்தின் போது அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து அந்த ஐந்து இராணுவ வீரர்களுடன் … Read more

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படத்த வேண்டும்

அரசாங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்படுகின்ற வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகள், புலம்பெயர்ந்து செல்வதற்கான வாய்ப்பாக நினைக்காமல், தங்களுடைய – தங்களை சார்ந்த மற்றும் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக கருதி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் கருத் திட்டத்தில், வடக்கின் ஒளிமயம் எனும் தொனிப் பொருளில் யாழ் முற்றவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை மற்றும் கண்காட்சியின் … Read more

வரி அறவிடும் செயற்பாட்டை நெறிப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்க பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயார்..

வரி அறவீட்டு செயற்பாடுகளில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிவதற்கு பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு விஜயம் செய்துள்ளது. • வரி அறவீட்டு செயல்முறையை நெறிப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் ஆதரவையும் வழங்க குழு தயாராக உள்ளது – தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வரிகளை அறவிடும் செயல்முறையை நெறிமுறைப்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களையும், அதற்கான ஆதரவையும் வழங்குவதற்குப் பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி … Read more

நாம் அனைவரும் வெளியிடுகின்ற கருத்துக்கள் நிதானமானவையாக அமைய வேண்டும்

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில், நாங்கள் ஒவ்வொருவரும், நிதானமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். யாழ். முற்றவெளியில் இடம்பெற்ற தொழில் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழுகின்ற அனைவரும் … Read more

பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! 

பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும் என்று இந்திய வர்த்தகர்களுடனான விசேட சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதார முறைக்கு கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் … Read more

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டும்!

அனைத்து மருந்துகள் தொடர்பாகவும் வெளிப்படைத்தன்மை அவசியம் – சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த மருந்துத் தொகை குறித்த தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, … Read more

2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கும் வகையில் இலங்கை பல்கலைக்கழகங்கள் தரமுயர்த்தப்படும்

சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் திறக்க பேச்சுவார்த்தை. பிராந்தியத்தில் சிறந்த உயர் கல்வி மையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்.2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். சர்வதேச … Read more