நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு

16 தொழிற்சங்க சம்மேளனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் (13) அலரி மாளிகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஊழியர் சேமலாப நிதி, தற்போதைய நிறுவன நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே, பிரதமரின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர், சட்டத்தரணி துஷார திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னணி சீன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு ஆய்வுப் பயணம்…

பெருமளவான சீன தொழில்முயற்சியாளர்கள் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளமுடியுமான முதலீடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காக (13) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தனர். சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழிற்துறை, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், விவசாயம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொழுதுபோக்குத் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட தகுவோவென் கல்சர் நிறுவனத்தின் ( Daguowen Culture Co) தலைவர் Zhang Qihua, சர்வதேச கலாசார … Read more

நியூசிலாந்து இலங்கை உறவில் புதியதோர் அத்தியாயம்

நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக் குழுவொன்றை இலங்கையில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்லவேண்டியதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்று (14) கொழும்பில் இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஆலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து கருத்துத்தெரிவிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இந்த நாட்களில் மடாரிகி அல்லது மாஓரி நியூசிலாந்து புதுவருட கொண்டாட்டம் இடம்பெறுவது ஒரு சுபசெய்தியாகும் என்றும், ஆரம்பமாக பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு பங்காண்மையை முன்கொண்டு செல்வதன் … Read more

சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு ஜனாதிபதி கண்டனம்

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என மேற்கத்தேய நாடுகளிடம் கோரிக்கை சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும், தெற்கின் பூகோள விழுமியங்களுக்கு மதிப்பளிக்குமாறும் மேற்கத்தேய நாடுகளைக் கேட்டுக் கொண்டார். இரத்தினபுரி புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை (11) பிற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். இரத்தினபுரி … Read more

முன்னணி சீன முதலீட்டாளர்கள் இலங்கைக்கு ஆய்வுப் பயணம்

பெருமளவான சீன தொழில்முயற்சியாளர்கள் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளமுடியுமான முதலீடுகளைப் பற்றி கலந்துரையாடுவதற்காக நேற்று (13) அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தனர். சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழிற்துறை, இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், விவசாயம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பொழுதுபோக்குத் தொழில் உள்ளிட்ட பல துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். வரையறுக்கப்பட்ட தகுவோவென் கல்சர் நிறுவனத்தின் (Daguowen Culture Co) தலைவர் Zhang Qihua, சர்வதேச கலாசார பரிமாற்றம் … Read more

நாட்டை கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் அவசியம்

அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன், புதிய வருமானம் ஈட்ட துரித முறைமை- ஜனாதிபதி புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு.நாட்டைக் கட்டியெழுப்ப நிதி ஒழுக்கம் இன்றியமையாதது எனவும், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துவதுடன் அரசாங்க வருமானத்தை ஈட்டுவதற்கான முறையான புதிய வழிமுறைகள் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அரசாங்கம் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவிலிருந்தும் அதிகபட்ச பெறுமதி பெறப்பட வேண்டும் எனவும், ஆனால் அது பெரும்பாலும் அரச செலவின … Read more

இலங்கை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தப்படும் (Digi – Econ) ஒக்டோபரில் ஆரம்பம்!

அனைவருக்கும் நவீன டிஜிட்டல் அடையாள அட்டை. அடுத்த வருட முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகம் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்.இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாகவும் அவர் மேலும் … Read more

விடைபெற்றுச் செல்லும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள, திரு.வினோத் குரியன் ஜேக்கப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று (13) இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம் செய்த இந்திய பிரதி உயர்ஸ்தானிகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், பின்னர் முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். இலங்கையில் தான் கடமையாற்றிய காலத்தில் பாதுகாப்பு … Read more

நாட்டின் 5 இலட்சம் தனிநபர் வருமான வரிக் கோப்புகளில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்

நாட்டின் 5 இலட்சம் தனிநபர் வருமான வரிக் கோப்புகளில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர் என்று தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். • உண்ணாட்டரசிறைச் சட்டத்தை திருத்துவது மற்றும் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவை இரத்துச் செய்வது தொடர்பில் கலந்துரையாடல்• வரி வருமானம் கிடைப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான பொறிமுறையொன்றை உருவாக்க முன்மொழிவு இந்நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 … Read more

இலங்கை ஏ அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை ஏ அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் ஏ அணிக்கு எதிராக இலங்கை ஏ துடுபக்பெடுத்தாடியது. இதற்கமைய இலங்கை ஏ அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை ஏ அணி சார்பில் அதிக ஓட்டங்களாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 124 பந்துகளுக்கு 133 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சௌமிய சர்கார் … Read more