பாராளுமன்றம் ஜூலை 18 முதல் 21 வரை கூடும்

• இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் எதிர்வரும் 20 ஆம் திகதி • ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜூலை மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அலுவல்கள் கடந்த 07 ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாரளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.அதற்கமைய, ஜூலை 18 … Read more

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்திற்கு சுமார் 206 பில்லியன் ரூபா ஒதுக்கத் திட்டம்

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவுகளை இந்த மாதத்திலிருந்து வழங்க நடவடிக்கை. அஸ்வெசுமவிற்கு சமர்ப்பித்துள்ள 10 இலட்சம் மேன்முறையீடுகளில், சுமார் ஆறரை இலட்சம் பகிரங்கப்படுத்தியுள்ள பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களாகும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக “அஸ்வெசும” நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் … Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை 

கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்களை ஒதுக்குதல், படித்த மகளீர் திட்ட காணி விவகாரம், கரும்புத் தோட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா தூதுவர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி தெவி குஸ்டினா டோபிங் மற்றும் இலங்கை இந்தோனேசிய தூதரகத்தின் அமைச்சு ஆலோசகர் திரு.ஹெரு பிரயித்னோ இருவரும் இராணுவத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை மரியாதை நிமித்தம் ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தளபதி அலுவலகத்தில் (11) சந்தித்தனர். இச்சந்திப்பின் போது பொது விடயங்கள் மற்றும் இராணுவத்தின் அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு … Read more

விவசாயிகளை மறந்து நாட்டில் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. – பிரதமர்

ஏற்றுமதி இலக்குடன் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக விவசாயிகளுக்கு தேசிய ரீதியாக விதைகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வை (11) மாவத்தகம, மீபேயில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஒரு கணம் திரும்பிப் பார்ப்போமேயானால், இன்று நாடு வீழ்ச்சி நிலையில் இருந்து மீண்டுள்ளது. இதற்கு முக்கிய சக்தியாக விளங்கியவர்கள் கிராமிய விவசாயிகள். எங்களிடம் இருக்கும் நிலத்தில் எவ்வளவு விவசாயம் செய்யப்படாதுள்ளது என்பதைக் கண்டறிய வேண்டும். தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படுவதை விடுத்து எங்களுக்கு தந்திருக்கலாம் … Read more

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு ” பாரிய திட்டம்”

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக “பாரிய திட்டம்” (Master Plan) தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். நேற்று முன்தினம் (11) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதான விருத்தி மத்திய நிலையத்திற்காக “பாரிய ஹம்பாந்தோட்டை” பிராந்திய மதீர்த் திட்டம் மற்றும் விரிவான பிரதான திட்டமாக அங்கீகரிப்பதற்காக ஆலோசனை வழங்கும் பணியை  சர்பானா ஜூரோங் தனியார் நிறுவனத்திற்கு … Read more

குறுகிய நோக்கங்களுக்காக உழைக்கும் சிலரின் விருப்பத்தை அனுமதிக்க முடியாது 

தேசிய அவசியத்திற்காக, நாட்டின் தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அரசாங்க கொள்கை தீர்மானத்திற்கு இணங்க  அமைச்சரவையினால் அருகிய இன வகை மரத்தை அகற்றுவதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது  குறுகிய நோக்கங்களுக்காக செயற்படும் சிலரின் விருப்பத்திற்கு இடமளிக்காது இருப்பதற்காகவுமே என போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுக்கான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் இத்தீர்மானம்  அதிவேக  நெடுஞ்சாலை நிர்மாணத்தில், … Read more

இலங்கை 'ஏ' அணிக்கு தலைவராக துனித் வெல்லாலகே

இலங்கையில் நடைபெறவுள்ள வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை ஏ அணியையும் இதற்கு தலைவரையும் இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடர் இன்று (13) முதல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதற்கமைய வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை இன்று (13) கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் எதிர்கொள்கிறது. இலங்கை ஏ அணி துனித் வெல்லாலகே (தலைவர்)பசிந்து … Read more

திட்டமிட்டு ஆசிய கிண்ணத்தை வெல்வதே எமது நோக்கம் – துனித்

முதல் போட்டியிலிருந்தே தானும், அணியும் போட்டிக்கு போட்டித் திட்டங்களைத் தயாரித்து போட்டியிடக் காத்திருப்பதாக இலங்கை ‘ஏ’ அணியின் தலைவர் துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் நடாத்தும் வளர்ந்து வரும் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று (12) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே துனித் இதனை குறிப்பிட்டார். இதன்போது துனித் மேலும் தனது கருத்துகளை தெரிவிக்கையில், ‘உண்மையைச் சொல்வதென்றால், எனக்கு இதுபோன்ற வாய்ப்பை வழங்கிய கிரிக்கெட் சபைக்கு முதலில் … Read more

பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேலும் ஊக்குவிக்கும் மாநாடு 

இந்து சமுத்திர பிராந்தியத்தில் விரிவான மற்றும் ஒன்றோடொன்று இணைந்த பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முத்தரப்பு 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு நேற்று (12) இடம்பெற்றது. 2023-2024ற்கான ஒத்துழைப்பு நெறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் மற்றும் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 6வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டக் கூட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. … Read more