இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (11) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொண்டு, இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் சமூக மற்றும் பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்வது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி ரணில் … Read more

இலங்கை சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கு அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் 

அரச கரும மொழிக் கொள்கையை விரைவாக நடைமுறைப்படுத்துவது பல மொழி பேசும் இலங்கை சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் திணைக்களங்களும் இது தொடர்பில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். கொழும்பில் (10) நடைபெற்ற தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தினால் (NLEAP) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர், பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய எந்தவொரு தேசத்தின் ஒற்றுமையும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் திறனைப் பொறுத்தே … Read more

“Glocal Fair 2023” உடன் இணைந்து யாழ் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுடன் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளையும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் “Glocal Fair 2023” உடன் இணைந்து பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதன்படி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தற்போது யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் சென்று சட்டவிரோத ஆள் கடத்தலைத் தடுப்பது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லிணக்கச் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்காமல், தற்காலத்திலேயே அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அந்த பிரச்சினைகள் நிவர்த்திக்கப்படும் பட்சத்தில் வருடம் ஒரு முறை ஜெனீவாவில் சாட்சிக் கூண்டில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் ஜனாதிபதி … Read more

தரமற்ற மருந்துகள் நாட்டில் என்றுமே விநியோகிக்கப்படவில்லை

தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சுகாதார துறையின் தற்போதைய நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை ஏதேனும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட மேலதிக செயலாளர், சில மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் போது அவற்றில் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்காக … Read more

ஸ்வீடனில் புனித அல-குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்

ஸ்வீடனில் புனித அல-குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ரி10 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

முதல் பருவகாலத்துக்கான லங்கா ரி10 தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் லங்கா ரி10 தொடரை ஜூன் மாதத்தில் நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதும், தற்போது டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான காலப்பகுதியை இலங்கை கிரிக்கெட் சபை ஐசிசியிடம் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வதேசத்தின் முன்னணி வீரர்களை உள்ளடக்கியதாக நடைபெறவுள்ள இந்த ரி10 தொடரில் 6 ஆடவர் மற்றும் 4 மகளிர் அணிகள் மோதவுள்ளன. ஒரு … Read more

தொழில் முனைவோரை உருவாக்கி நாட்டைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் நோக்கம்

“அஸ்வெசும” திட்டத்தின் இறுதி இலக்கு வறுமை இல்லாத நாடு அல்ல, மாறாக அபிவிருத்தி அடைந்த நாடாகும். அடுத்த ஆண்டுக்கான ‘அஸ்வெசும’ பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 01 முதல் கோரப்படும் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல். நலன்புரி அரசிலிருந்து தொழில் முனைவோர் அரசை நோக்கி இலங்கையைக் கொண்டு செல்வதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கம் என்றும் “அஸ்வெசும” வேலைத்திட்டத்தின் இறுதி இலக்கு வலுவான தொழில்முனைவோர் வலையமைப்பை உருவாக்குவதே என சமூக வலுவூட்டல் இராஜாங்க … Read more

அடுத்த வருடத்திற்குள் இலங்கையின் கல்வித்துறையில் மாற்றம்

இருபத்தியோராம் நூற்றாண்டிற்கு ஏற்ற மாணவனை உருவாக்கும் வகையில் அடுத்த வருடத்திற்குள் இலங்கையின் கல்வித்துறையில் மாற்றம் நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா” மாணவர் காப்புறுதித் திட்டம் 2024 ஆம் ஆண்டு முதல்.க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்.தாமதமான அனைத்து பரீட்சைகளையும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த்.அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் … Read more

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பயிற்சி போட்டி இன்று ஆரம்பம்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னர் பாகிஸ்தான் அணி விளையாடும் ஒரேயொரு பயிற்சிப் போட்டியான இந்தப் போட்டி இன்றும் (11) நாளையும் (12) ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள பயிற்சிப்போட்டிக்கான குழாத்தின் தலைவராக … Read more