தகுதிச் சுற்றில் முதல் 11 இடங்களுக்குள் மூன்று இலங்கை வீரர்கள்

இவ்வருட இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான சிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் விளையாடிய வீரர்களில் சிறந்து விளங்கும் 11 வீரர்களில் இலங்கை அணியின் மூன்று வீரர்களை உள்ளடக்குவதற்கு சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளின் வீரர்களில் 11 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டிகளில் 2 சதங்களுடன் இன்னிங்ஸை ஆரம்பித்த பெதும் நிஸ்ஸங்க, ஒரு … Read more

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது அணியை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி

வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது அணியை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் … Read more

அஸ்வெசும மேன்முறையீட்டுத் திகதி முடிவடைந்தாலும், நியாயமான காரணங்கள் இருப்பின் விண்ணப்பங்களை ஒப்படைக்க முடியும்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுடன் நிறைவடைந்த போதிலும், நியாயமான காரணம் இருப்பின் எவரும் ஜனாதிபதி அலுவலகத்தில் முறையிட முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அஸ்வெசும நலன்புரி உதவிகள் … Read more

அதிக வருமானம் ஈட்டக் கூடிய விவசாய உற்பத்திகளை இளம் விவசாய முயற்சியாண்மை கிராமங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எமது இலக்கு

அதிக வருமானத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய விவசாய உற்பத்திகளை இளம் விவசாய தொழில் முயற்சியாண்மைக் கிராமங்களுக்கு அறிமுகப்படுத்துவதே தமது நோக்கம் என்பதுடன் அங்கு புதிய விவசாய தொழில்நுட்பம், உபகரணங்கள், அதிக அறுவடை கிடைக்கக் கூடிய விதை வகைகள் என இதற்கு அவசியமான சகல வசதிகளையும் வழங்குவதாகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ரன்ன பிரதேசத்தில் கஹந்தாவை மற்றும் வாடிகலை ஆகிய இரு கிராமங்கள் இளம் விவசாய தொழில் முயற்சியாண்மை கிராமங்களாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை … Read more

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களுக்கு ஆலோசகர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கென்வில் ஹோல்டிங்க்ஸ் தனியார் நிறுவனம், ஹொட்டேல் டெவலொப்பேர்ஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ லங்கா எரிவாயு ஆகியவற்றுக்கான பரிவர்த்தனை ஆலோசகர்களைத் தெரிவு செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  தெரிவு செய்யப்பட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவின் அடிப்படையில், நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் … Read more

கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தை (சதொச) மீள்கட்டமைக்க அமைச்சரவை அனுமதி

கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தை (சதொச) தாபிக்கப்பட்டதன் நோக்கம் அடையப் பெறாமை, இந்நிறுவனத்தால் பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களிப்புக்கள் கிடைக்காமை போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு சதொச நிறுவனத்தை மீள்கட்டமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கூட்டுறவு மொத்த வர்த்தகக் கூட்டுத்தாபனத்தை (சதொச) மீள்கட்டமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நெறிப்படுத்தல் மற்றும் கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்து உத்தேச மீள்கட்டமைப்புச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக வணிக, வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே….

இலங்கை கடற்ப்பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறையான இழுவைமடித் தொழிலை மேற்கொண்டிருந்த நிலையில், 15 தமிழக கடற்றொழிலாளர்களும் இரண்டு மீன்பிடிப் … Read more

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதியில்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப்பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாத நடுப்பகுதிக்குள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர்; மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், இந்த (2023) வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. தாமதமான அனைத்துப் பரீட்சைகளையும் 2024 ஆம் ஆண்டுக்குள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது என்றும் … Read more

வட, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் காலையில் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூலை 11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  ஊவா மாகாணத்திலும் … Read more

மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம் நிறுவவது குறித்து இறுதிக்கட்ட நடவடிக்கை

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது. மேலும், பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.