குறுகிய காலத்தில் இலங்கையை மீட்க ஜனாதிபதியால் முடிந்தது – மஹிந்தானந்த அளுத்கமகே

உலக நாடுகள் பலவும் போராட்டங்களின் காரணமாக முடங்கிப் போயுள்ள நிலையில், ஒரு வருடத்திற்குள் அந்த சவால்களை வெற்றிக்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்தினால் முடிந்துள்ளெதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சொந்த வீட்டிற்கு தீ மூட்டியிருந்தமை, பொதுச் சொத்துக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட தினமாக மே 09 ஆம் திகதி வரலாற்றில் இடம்பிடித்துள்ளதெனவும், போராட்டங்களின் பின்னால் காணப்பட்ட நிகழ்ச்சி நிரல் … Read more

தாதியர் பயிற்சிக்காக 3315 மாணவர்கள்

தாதியர் சேவைக்காக மேலும் 3315 மாணவர் தாதியர்களாக இணைத்துக் கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கான ஆட்சேர்ப்பு கடிதங்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் உத்தியோகபூர்வமாக அமைச்சில் இன்று (10) காலை வழங்கப்படவுள்ளது. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நியமனம் பெற்ற குழுவொன்றிற்கு அமைச்சர் ஆட்சேர்ப்பு கடிதங்களை வழங்கி வைப்பதுடன், ஏனைய மாணவர்களுக்கும் இன்று (10) நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாதியர் மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள 15 தாதியர் … Read more

இரண்டு வாரத்திற்குள் வடக்கு புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையின் அனுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப் பணிகளுக்காக சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர்ச்சியான அவதானிப்பு செலுத்தப்பட்டுவந்த நிலையில் தற்போது தண்டவாள திருத்தப்பணிகள் நிறைவு பெற்றுள்ளதைத் தொடர்ந்து நேற்று (09) வெள்ளோட்ட பயணம் நடைபெற்றது. இதற்கமைய இன்னும் இரண்டு வாரத்திற்குள் வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 பேருக்கு நியமனம்

கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நியமன கடிதங்களை வழங்கியுள்ளார். 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கவனத்துக்கு நேற்று … Read more

காரைநகர் – ஊர்காவற்துறை கடல் போக்குவரத்து சேவை ஆரம்பம்

காரைநகர் – ஊர்காவற்துறை இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவை இன்று (10) தொடக்கம் மீண்டும் சேவையை ஆரம்பித்துள்ளது. குறித்த கடல் பாதை பழுதடைந்தமை தொடர்பாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு அமைச்சர் உரிய அதிகாரிகள் ஊடாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கு அமைய, போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மன்னம்பிடிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு

வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மன்னம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலன்னறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை  விடுத்துள்ளார். மேலும் விபத்துக்குள்ளானவர்களுக்கு தேவையான அவசர உதவிகளை  உடனடியாக வழங்குமாறு கிழக்கு மாகாண சுகாதார … Read more

தோல்வியின்றி தொடரை வென்றது இலங்கை அணி

ஐ.சி.சி உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்தை 128 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றிபெற்றது. ஹராரேயில் நேற்று (09) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பலில் சஹன் ஆரச்சிகே 71 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி ஸ்திரமான ஓட்டங்களை பெற உதவினார். ஆரச்சிகே ஆடிய இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி இதுவாகும். குசல் மெண்டிஸ் … Read more

ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்

ஊழல் ஒழிப்புச் சட்டத்தை ஒழிக்க முற்படுவோரை மக்கள் புறக்கணிப்பர் – இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் சரத் ஜயமான்ன. முழு நாட்டினதும் எதிர்பார்ப்பாக காணப்படும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தை எதிர்ப்போரை மக்கள் புறக்கணிப்பர் என இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெனரல் சரத் ஜயமான்ன தெரிவித்தார். அரசாங்க துறைக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை தவிர்ப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு … Read more

ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமாகியுள்ள உத்தியோகபூர்வ சின்னத்தை தேடுவதற்கு உதவுங்கள்

ஜனாதிபதியின் செயலாளர் பொது மக்களிடம் கோரிக்கை. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 2022-07-09 – 2022-07-14 வரையிலான தினங்களில் ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திக்கொண்டு அதற்குள் தங்கியிருந்த காலப்பகுதியில் கலைத்துவ மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளன. … Read more

மலையகத்திற்கு தனி பல்கலைக்கழகம் நிறுவவது குறித்து இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல்…

மலையக இளைஞர், யுவதிகளின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த மலையகத்திற்கான தனி பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இடம்பெற்றது கொட்டகலை ஆசிரியர் கலாசாலையை கேந்திரமாக கொண்டு பல்லைக்கழகத்தின் முதற்கட்ட தொகுதியினை நிறுவுவதற்கும், மேலும் நிர்வாக ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு செல்வதற்குமான இறுதிக்கட்ட கலந்துரையாடலாக இது அமையப்பெற்றது. மேலும், பல்லைக்கழகத்தில் எந்தவிதமான பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.