ஊழல் தடுப்பு சட்டமூலம் இன்றும் விவாதத்திற்கு.

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் (விவாதத்தின் போது ஒத்திவைக்கப்பட்ட கேள்வி – ஜூன் 21) இன்று (06) பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெற்றது. மேலும், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டமூலமும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட உள்ளது.கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்ட விவாதம் பற்றி சபைக்கு விளக்கினார்.

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிடத் தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோ (Takafumi kadono) ஆகியோருக்கும் இடையில் நேற்று (05) … Read more

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம்

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக புதிய சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். பேச்சுச் சுதந்திரம் அல்லது மத சுதந்திரம் என்ற போர்வையில் எந்த மதத்தையும் அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, … Read more

நாட்டின் 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை

ஜூலை மாத இறுதியில் இலங்கைக்கு புதிய விநியோகஸ்தர்களின் முதலாவது எரிபொருள் கப்பல் வரும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர. பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் … Read more

இலங்கை-டிரினிடாட் மற்றும் டொபாகோ இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு அண்மையில் இலங்கையுடன் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முறைப்படுத்தும் என்று டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் தெரிவித்தார். டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் புதிய உயர் ஸ்தானிகர் கலாநிதி ரோஜர் கோபோல் நேற்று முன்தினம் (03) பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முறைப்படுத்துவதன் மூலம் வர்த்தகம், கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுலா … Read more

எயார் சீஷெல்ஸ் நேரடி விமான சேவை மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை வளர்ச்சி

கொழும்பிற்கு எயார் சீஷெல்ஸ் நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் துரித வளர்ச்சி ஏற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய சீஷெல்ஸ் உயர் ஸ்தானிகர் லலதியானா அக்குச்சே நேற்று முன்தினம் (03) அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். கண்டியில் நடைபெற்ற ஒரு விசேட நிகழ்வில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றுப் பத்திரத்தை வழங்கிய பின்னர் எல்ல மற்றும் கண்டி பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததன் … Read more

இலங்கையின் மாலைதீவு உயர்ஸ்தானிகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் கௌரவ அலி ஃபைஸ் (Ali Faiz) அவர்கள் நேற்று (04) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார். இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வுக்கு இணையாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், மாலைதீவு உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்படைத் தளபதி இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், கடற்படைத் தளபதியின் கடற்படை உதவியாளர் கொமடோர் கோசல வர்ணகுலசூரிய மற்றும் … Read more

விவசாய திட்டத்தில் உள்ளடக்கப்படாத பயிர்களுக்கு இலவச காப்பீடு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை

2023 வரவு செலவு திட்டத்தில் குறிப்பிட்ட விவசாய திட்டத்தில் உள்ளடக்கப்படாத பயிர்களுக்கு இலவச காப்பீடு வழங்குவது தொடர்பில் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. 2024 வரவு செலவு திட்டத்திலும் இதேவிடயம் தொடர்பில் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இரண்டரை ஏக்கருக்கு 40,000 ரூபாய் என விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இன்று (5) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ஸ் நிர்மலநாதன் விவசாய அமைச்சர் … Read more

சபாநாயகரின் அறிவித்தல்

2023.06.29 அன்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டதாகவும், இதன்போது அவருக்கு கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகியோரால் 2023.06.30 அன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதும் 2023.07.01 அன்று பாராளுமன்ற சபையிலும் தனது கவனத்துக்குக் கொண்டுவந்ததாகவும், அது தொடர்பில் தன்னிடம் தீர்மானமொன்றை கோரியிருந்ததாகவும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார். … Read more

வடக்கில் சுகாதார சேவைகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டம்

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகளை வழங்குவதற்காக நெதர்லாந்து அரசாங்கம் சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடமாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்காக செயற்திட்டச் செலவில் 75ம% அதாவது, 4.5 மில்லியன் யூரோ கடன் தொகை ஒன்றைப் … Read more