உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் திருத்தங்களுடன் நேற்று (01) பாராளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை குறித்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றதுடன், 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. கௌரவ பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி … Read more

பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை கூடும்

▪️ ஜூலை 04 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது ▪️ ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் ஜூலை 05 ஆம் திகதி▪️ ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இரண்டாவது நாளாகவும் ஜூலை 06 ஆம் திகதி பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை முதல் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர … Read more

ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்துறைப் பிரச்சனைகளில் தலையிடுவதாக துறைசார் மேற்பார்வைக் குழு உறுதியளிப்பு

இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் ஒன்றியம் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது. இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் 2023.06.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் ஆடை உற்பத்தித் தொழிற்துறையில் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த ஆடைத் … Read more

வட மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூலை 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூலை 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களக்கு 50 மில்லி மீற்றருக்கம் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வட மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் … Read more

வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை பணிப்பாளர் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு … Read more

எரிபொருள் விலைகளில் மாற்றம்.

எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரித்து 328 ருபாவாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒக்டேன் 95, லீற்றரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 365 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 346 ரூபாவாக மாற்றப்பட்டுள்ளது. டீசல் ஒரு லீற்றர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 308 ரூபாவாக … Read more

உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்கள் ஏழு பேரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளித்தனர்!

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்களும் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கண்டி ஜனாதிபதி மாளிகையில் (30) இந்த நிகழ்வு இடம்பெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக … Read more

கடற்றொழில்சார் பழைய சட்டங்கள் திருத்தப்படும்

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. மீன்பிடித்துறை சார்ந்த பல சட்டங்கள் மிகவும் பழையவை என்பதால், காலத்திற்கேற்ப, பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கூடிய சட்டதிருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இதற்கான யோசனைகளை இவ்வருட இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பித்து, அனுமதியைப் பெற்று, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போதிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே தீர்வுகள் இருப்பதாகவும், ஏற்கனவே … Read more

மூத்த கலைஞர் எஸ்.எச்.சரத்தின் “பாரம்பரியமும் வேற்றுமையும்” சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

மூத்த கலைஞர் கலாசூரி எஸ்.எச்.சரத்தின் “பாரம்பரியமும் வேற்றுமையும்” என்ற தொனிப்பொருளின் கீழான சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (29) பார்வையிட்டார். சீ.டபிள்யூ. கண்ணங்கரா மாவத்தையில் அமைந்துள்ள சியம் இல்லத்தில் (Siam House) மே 23 ஆம் திகதி ஆரம்பமாகிய சித்திரக் கண்காட்சி ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. எஸ்.எச்.சரத்தின் ஐம்பது வருட கலை வாழ்க்கையில் 40 வருடகாலத்தை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட வாழ்வியல் தொடர்பாடல்கள் மற்றும் சுற்றுச்சூழலுடன் தொடர்புபட்ட அம்சங்களை மையப்படுத்திய … Read more

மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

மின் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், 0 முதல் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மாதாந்த பாவனையாளர்களுக்கு, மின் கட்டணங்களில் இருந்து 65 வீதம் குறைவடையும் என்பதுடன், அலகொன்றின் விலை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்படும். மாதாந்தக் கட்டணம் 400 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைவடையும். 60 அலகுகளுக்கு குறைவான பாவனையாளர்களுக்கான அலகின் விலை 42 ரூபாய் முதல் … Read more