அகத்திமுறிப்பு குளப்புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

உலக வங்கியின் நிதி உதவியில் ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ செயற்திட்டத்தின் மூலம் மன்னார் சிலாவத்துறை நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட அகத்திமுறிப்பு குளப்புனரமைப்பு வேலைத்திட்டமானது கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் (27) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுமார் 442.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படும் குறித்த வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி … Read more

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைவில் மறுசீரமைக்க தவறினால் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தொடர்ச்சியாக நட்டமீட்டிவரும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாதெனவும், மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளுக்கு சர்வதேச நிதி செயற்பாடுகள் … Read more

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரச அனுசரணை

புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர நிகழ்வுகள் அரச அனுசரணைடன் இடம்பெறவுள்ளன. பெல்லன்வில விகாரையின் எசல நிகழ்வுகள் 73ஆவது முறையாக ஓகஸ்ட் 02 முதல் 20 வரையில் இடம்பெறவுள்ளன. இதன் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. பெல்லன்வில … Read more

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (28) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் தற்போதைய பதவி நிலை பிரதானியான எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்சவுக்கு இன்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் எயார் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச இந்நாட்டின் 19ஆவது விமானப்படை தளபதியாகவுள்ள நிலையில் அவர் கொழும்பு … Read more

நாட்டிலுள்ள வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் கணக்குகள் பாதுகாக்கப்படும்

ஊழியர் சேமலாப நிதியங்கள் மீது கைவைக்கப்போவதில்லை- மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க. ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக் கணக்குகளையும் பாதுகாப்பதை உறுதி செய்வதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். நாட்டின் வங்கித் துறையில் சரிவு ஏற்பட்டால், மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதால் … Read more

உர வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

இதுவரை வழங்கப்பட்ட உரம் கொள்வனவு செய்யும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டு மாதங்களுக்குரியதாகும், எனினும் உரம் கொள்வனவு செய்வதற்கான காலத்தை இவ்வருடம் டிசம்பர் வரை நீடிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ள வவுச்சர்களை பகிர்வதில் அரசியல்வாதிகளையும் பங்குகொள்ளுமாறு விவசாய அமைச்சோ அல்லது அரசாங்கமோ வலியுறுத்தவில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய சில அதிகாரிகள் குழுவொன்று வேண்டுமென்றே வவுச்சர் வழங்குவதை தாமதப்படுத்தியதால் … Read more

தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய EPF, ETF ஆகியவற்றை விரைவில் வழங்க நடவடிக்கை

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்றது. அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றிய தோட்ட தொழிலாளர்களில் பலருக்கு 2002 … Read more

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம, இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இதற்கமைய அவர் மேலும் தெரிவிக்கையில் இதுவரையில் பேணப்பட்டு வந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் இன்று (30) நள்ளிரவு முதல் எவ்வித மாற்றமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தேசிய கொள்கை ஒவ்வொருவருடமும் ஜீலை முதலாம் திகதி பேருந்து கட்டணத்தில் மாற்றங்களை … Read more

எவரையும் கைவிடாத வகையில் “அஸ்வெசும” திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுரை

பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்டில் மீண்டும் வாய்ப்பு – எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை சமர்பிக்க ஜூலை 10 வரையில் கால அவகாசம். “அஸ்வெசும” சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டத்திற்காக நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பரீசீலனையின் பின்னர் அவற்றில் 3.3 விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் “அஸ்வெசும” பலன்களைப் பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என்ற வகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதற்காக 02 மில்லியன் பேரின் பெயர் பட்டியலொன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதேச … Read more

அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 2 பெண் அதிகாரிகள், 3 பெண் மாலுமிகள்

இலங்கை கடற்படை வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் (02) மற்றும் மூன்று பெண் மாலுமிகள் (03) அடங்கிய முதல் பெண் கடற்படை பாராசூட் குழு (21) அம்பாறை விமானப்படை பாராசூட் பயிற்சி பாடசாலையில் தமது அடிப்படை பாராசூட் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இதன்படி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் கருத்தின் பிரகாரம் கடற்படையில் ஆண் மாலுமிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட துறைகளை பெண் மாலுமிகளுக்கு வழங்கும் வகையில் இந்த அடிப்படை பாரசூட் பாடநெறியை கற்க … Read more