வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

போலந்து மற்றும் மலேசியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாகக் கூறி ஒரு கோடியே முப்பதாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டுப் பயணத்திற்கு நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்செலாகே ஷியாமலி என்ற சந்தேக நபர், 2021 ஆம் ஆண்டு முதல் … Read more

தேர்தல்கள் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர். துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி இலங்னை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும், ஏனைய உறுப்பினர்களாக நிமலசேன கார்தியா புந்திஹேவா, தையமுத்து தனராஜ், பேராசிரியர் பர்சானா பாத்திமா மற்றும் கலாநிதி தினுக் குணத்திலக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்கவும் ஏனைய உறுப்பினர்களாக … Read more

தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் இன்று…

தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாள் இன்றாகும். உலகளாவிய இஸ்லாமிய மக்களுடன் இணைந்து இலங்கை வாழ் இஸ்லாமியர்களும் இன்று புனித ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஹஜ் பண்டிகையை முன்னிட்டு News.lk தமிழ் செய்திப் பிரிவு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று (29) காலை சிறப்பு பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட … Read more

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் – நிதி இராஜாங்க அமைச்சர்

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவித்தார். அதில் வரி அறவீடு தொடர்பிலான நடைமுறைப் பிரச்சினைகளை நிவர்த்தித்தல் தொடர்பிலான விசேட பரிந்துரைகளை உள்ளடங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார அடிப்படையில் பார்க்கையில் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டியது முக்கிய விடயமாகும் என்றும் வருமான அதிகரிப்பின் போது வரி அறவீடுகளை சரியான … Read more

கௌரவ சபாநாயகரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி

எந்த இனத்தைச் சார்ந்த மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனதளவில் ஒன்றுபட்டு, துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் பெருந்தன்மையையும் பொறுமையையும் பரப்ப வேண்டும் என்ற உன்னத நோக்கில் கொண்டாடப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாளை கொண்டாடும் அனைத்து இலங்கைவாழ் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் கடந்த காலங்களில் ஏற்பட்ட நீண்ட இக்கட்டான சூழ்நிலையிலும், மக்கா யாத்திரைக்கு சென்று நபிமார்கள் அவர்களின் வாழ்வில் செய்த அளவற்ற தியாகங்களை நினைந்து ஒன்றாகக் இந்நாளை … Read more

அரச துறை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து நிபுணர்கள் குழு இலங்கைக்கு.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எப்பள்டன், பிரதமர் தினேஷ் குணவர்தனவை (28)அலரி மாளிகையில் சந்தித்தார். இலங்கையுடனான இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்குமாறும் கொழும்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவியை அதிகரிக்குமாறும் நியூசிலாந்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது கோரிக்கை விடுத்தார். மஹரகம இலங்கை பல் மருத்துவக் கல்லூரி நியூசிலாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அன்பளிப்பு என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படும் வசதிகளை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தார். உயர் ஸ்தானிகர் அதை ஏற்றுக்கொண்டதுடன், அந்த … Read more

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் பரந்து வாழும் இஸ்லாமியர்கள் இன்று தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றி ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற அம்சங்களை கடைபிடித்து வாழவேண்டும் என்பதே மிகுந்த மதிப்புடன் கொண்டாடப்படும் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு வழங்கும் முக்கிய செய்தியாகும். இந்த ஆன்மீக பெறுமானங்களினால் இலங்கை சமூகத்தை மென்மேலும் வளப்படுத்தி, குறுகிய வேறுபாடுகளை களைந்து அனைவரும் நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ இந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் உறுதிபூணுவோம்.   தினேஷ் குணவர்தனபிரதமர்இலங்கை ஜனநாயக சோசலிசக் … Read more

ஹஜ் பெருநாள் வாழ்த்துச்செய்தி

ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் கட்டாய மத நடைமுறையின் நிறைவைக் குறிக்கின்றது. ஹஜ் என்பது ‘புனித இடத்திற்குச் செல்வதற்கான’ அரபு மொழியாகும். அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் ஒன்றுபட்ட அனைத்து இஸ்லாமிய யாத்திரிகர்களின் உலகளாவிய கூட்டம் என இதனைக் குறிப்பிடலாம். ஹஜ்ஜின் சமயச் சடங்குகளில் பங்குபெறும் இச்சந்தர்ப்பத்தில் உடல், ஆன்மிகம் மற்றும் பொருளாதார ரீதியாக ஆரோக்கியமாகவுள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெருமிதமடைகின்றேன். இஸ்லாத்தின் ஐந்து தூண்களான நம்பிக்கை, நோன்பு, ஏழைகள் மீது இரக்கம் … Read more

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் 

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு, கல்முனை நிதாஉல் பிர் அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் மிக குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) இடம் பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபர் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் இன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஜூன் 28 ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 28 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் … Read more