“அஸ்வெசும” பயனாளிகள் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத அனைவரும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன் மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்கவும்

வெளியிடப்பட்ட பட்டியல் இறுதிப் பட்டியலல்ல – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார். பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். “அஸ்வெசும” சமூக நலன்புரி நன்மைகள் வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (27) நடைபெற்ற … Read more

கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் தம்பலகமுவ பகுதியில் கைது

திருகோணமலை, தம்பலகமுவ, மீரா நகர் பகுதியில் (26) இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படை மற்ற சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் படி கடற்படைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை … Read more

புனித ஹஜ்ஜீப் திருநாளை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் 

புனித ஹஜ்ஜுப் திருநாளை முன்னிட்டு கல்முனை நிதாஉல் பிர் அமைப்பின் அனுசரனையுடன் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளில் மிக குறைந்த வருமானம் பெறும் 200 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) இடம் பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபர் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் இன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை … Read more

ஜுலை 01ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்

வருகின்ற ஜூலை 01 ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் பிரகாரம் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் சபாநாயகர் அறிவித்துள்ளார்

களனிவெளி புகையிரத போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

களனிவெளி புகையிரத போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளது என்று ரயில்வே மேலதிக பொதுமுகாமையாளர் (செயல்பாட்டு) இன்று (28) தெரிவித்தார். அதற்கமைய களனிவெளி ரயில்வே போக்குவரத்து சேவை நடவடிக்கைகள் இன்று பி.ப 2.00 மணி முதல் வழமைபோன்று செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் மாலை நேரத்தில் இயங்கும் அலுவலக ரயில்களும் வழமை போன்று செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேற்று மாலை கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம வரை புறப்பட்ட ரயில் பொரல்லை கொட்டா வீதிக்கு … Read more

இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றி

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஸ்கொட்லாந்துக்கு எதிரான தனது கடைசி குழுநிலை போட்டியிலும் இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. புலவாயோவில் நேற்று (27) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பில் பத்தும் நிசங்க 75 ஓட்டங்களையும், சரித் அசலங்க 65 63 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றார். ஸ்கொட்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் கிறிஸ் கிரீவ்ஸ் 4 விக்கெட்டுகளையும் மார் … Read more

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் ஊழியர்களின் சேமலாப நிதி உள்ளிட்ட எந்தவொரு பொது நிதிய அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது

உள்நாட்டு வங்கிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையையோ அல்லது எந்தவொரு அரச, தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையோ பாதிக்காது. 50 மில்லியனுக்கும் அதிகமான வங்கி வைப்பாளர்களின் எந்தவொரு வைப்புத்தொகைக்கோ அதற்கான வட்டிக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகள் நாளை அமைச்சரவைக்கு – ஜனாதிபதி கம்பஹாவில் தெரிவிப்பு. உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதியம் உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ மிகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட உயர் ஓய்வூதிய நிதிய … Read more

ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

நாளை (29) கொண்டாடப்படவுள்ள இஸலாமியர்களின் ஹஜ் பெருநாளை (ஈதுல் அழ்ஹா) முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 30.06.2023 வெள்ளிக் கிழமை அன்று விசேட விடுமுறையினை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட விசேட விடுமுறையினை முன்னிட்டு 08.07.2023 சனிக்கிழமையன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2023 ஜூன் 27 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் … Read more

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது 

அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளவும். விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கவும். பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது … Read more