மனித வள முகாமைத்துவ திட்டத்தை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பணிப்பாளர் குழுவின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள மனித வள அபிவிருத்தி நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டிற்கு ஏற்ற மனித வள முகாமைத்துவத் திட்டத்தை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட பணிப்பாளர் குழுவின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் நேற்று (26) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்றது. கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் நிரஞ்சன் டி. குணவர்தன, தொழில் அமைச்சின் … Read more

மக்களின் குடியிருப்புக்களும் விவசாயம், நீர்வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தரைக்கு பொருத்தமான இடங்கள் விடுவிப்பு

வனவளப் பாதூகாப்பு  திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக வர்த்தமானி ஊடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மக்களின் குடியிருப்புக்களும் விவசாயம், நீர்வேளாண்மை மற்றும் மேய்ச்சல் தரைக்கு  பொருத்தமான இடங்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சி இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. அதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, 1985 ஆம் ஆண்டிற்கு பின்னர் குறித்த இரண்டு திணைக்களங்களினாலும் அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பதற்காக துறைசார் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட … Read more

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை

யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஆரம்பகர்த்தாவான டக்களஸ் தேவானந்தா தற்போது அதனை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளார். முதற்கட்டமாகவே இப் பேருந்து நிலையத்திற்கு வருகைத்தரும் தாய்மார்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தம் குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதற்காக புதிய ஓய்வறை ( தாய்ப்பால் கூடம்) திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது … Read more

12வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொடரில் கடற்படை மகளிர் அணி வெற்றி

அண்மையில் ஏகல, இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற 2022/2023 12வது பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி போட்டித்தொடரில் சாம்பியன்ஷிப்பை கடற்படை மகளிர் ஹொக்கி அணி வென்றது. அதன்படி இலங்கை விமானப்படை மகளிர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் திறமையாக விளையாடிய கடற்படை மகளிர் அணி 4/3 என்ற புள்ளி கணக்கில் மகளிர் சம்பியன் பட்டத்தை வென்றதுடன் இறுதிப் போட்டியில் பெண் கடற்படை வீராங்கனை பி.என்.எம்.ஜெயநெத்தி, பெண் கடற்படை வீராங்கனை ஜி.ஜி.ஜி.தமயந்தி, பெண் கடற்படை வீராங்கனை கே.எல்.ஏ.எஸ்.சீ குமாரி மற்றும் … Read more

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி

06 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 21 முதல் 23 வரை தாய்லாந்தில் ஆரம்பமாகும். ஆசியான் நாடுகளுக்கு விசேட கவனம் செலுத்தி பிரதான மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLTFTA) தொடர்பான ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று (26) காலை கொழும்பில் ஆரம்பமானது. கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் தொடங்கிய அதன் ஆரம்ப அமர்வில் கருத்துத் தெரிவித்த சர்வதேச வர்த்தக … Read more

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்க உடனடி நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் பணியாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய காலப்பகுதியில் இடமாற்றத்தை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற யாழ் மாவட்ட சமுத்தி தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களில் பணி இடமாற்றங்கள் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ள நிலையில் … Read more

மொழியை மேலும் வளப்படுத்தும் இலக்கிய வழிகளை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். – பிரதமர் 

தேசத்தின் கலை இலக்கியத்துறையை வளப்படுத்தும் நோக்குடன் பிரதமர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “சங்கதன மண்டபய “ நிகழ்ச்சித் தொடரில் (22) இடம்பெற்ற இலக்கிய முன்னோடி சாகர பலன்சூரியவின் (கேயஸ்) பாத்திரம் என்ற தலைப்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ஒரு கவிஞராக கேயெஸ் என்ற பெயரில் பதியப்பட்டிருப்பது அவரது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் இலக்கிய வடிவங்களின் ஊடாக வளரும் இளம் தலைமுறைக்கு … Read more

உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஏறாவூர் SSC அணி

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஏறாவூர் SSC அணி சம்பியன் பட்டம் வென்றது. மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ்வு வெபர் மைதானத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பத்மநாபா ஞாபகார்த்த அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பாடுமீன் பொழுது … Read more

சூப்பர் 6 சுற்றுக்கு  தகுதி பெற்றது இலங்கை அணி

அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி 2023 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புலவாயோவில் நேற்று (25) நடைபெற்ற பி குழுவுக்கான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது. இதன்போது ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது கன்னி சதத்தை (103) பெற்ற திமுத் கருணாரத்ன, சதீர … Read more

தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு உதவும் வகையில் 'கொவி மிதுர சேவா' எனும் செயலி அறிமுகம்

தேயிலை ஆராய்ச்சி தினத்தில் தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் உழவர்களுக்கு உதவும் வகையில் “கொவி மிதுர சேவா” (உழவர் நட்பு சேவை) எனும் பெயரிலான செயலியினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும், “Ceylon Tea” எனும் இப் பெயரினை உலக அளவில் கொண்டு செல்ல அனைத்துவிதமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சி.எஸ் லொகுஹெட்டி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) காலை நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு … Read more