Pregabalin Capsules 150 mg வகையின் மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரால் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வேனில் கொண்டு செல்லப்பட்ட நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூறு (42300) Pregabalin Capsules 150 mg மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கல்பிட்டி, கரம்ப வீதித் தடைக்கு அருகில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 24 ஆம் திகதியன்று இரவு, கல்பிட்டி கரம்ப வீதித் தடைக்கு அருகில், வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் … Read more

வெளிநாட்டவர்களின் மத்தியில் இலங்கையின் ஆயர்வேத உற்பத்திகளை முன்னேற்றும் நிகழ்ச்சித் திட்டம்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) மற்றும் ஒன்றிணைந்த வெளிநாட்டவர்கள் மத்தியில் இலங்கையின் ஆயர்வேத உற்பத்திகளை முன்னேற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிற ஜயகொடியின் தலைமையில் சுதேச வைத்திய அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது. விசேடமாக இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குறிக்கோளுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. அதற்கான தொழில்நுட்பம், இயந்திரங்கள் மற்றும் சந்தையில் காணப்படும் பிரச்சினைகளை அவர்களுக்கு முன்வைத்ததுடன் அதற்கு அவசியமான ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு ஜப்பான் … Read more

நாட்டின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 26 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 26 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

மலையக வீடமைப்புத் திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையக வீடமைப்பு திட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பங்குபற்றலோடு நடைபெற்றது. கொழும்பு, கொள்ளுபிட்டியவில் உள்ள அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. தீப்தி, திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் வஹாப்தீன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, அமைச்சின் … Read more

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் அடுத்த வார இறுதியில் டெங்கு ஒழிப்பு விசேட சுத்திகரிப்பு செயற்திட்டம்

வீட்டிலேயே தங்கியிருந்து ஒத்துழைப்பு வழங்குங்கள் டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி சுகாதார இராஜாங்க அமைச்சர்- விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல. எதிர்வரும் வார இறுதியில் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு ஒழிப்பிற்கான விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே தங்கி அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருவதாக டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவியும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சீதா அரம்பேபொல தெரிவித்தார். இந்த திட்டத்தைத் தொடர்ந்து கொழும்பு … Read more

‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது -அரசாங்கம் வலியுறுத்துகிறது

அரசியல் தூண்டுதல்கள் அல்லது வெளி அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஜுலை 10 ஆம் திகதி வரையான மேன்முறையீட்டு காலத்திற்குள் பிரதேச செயலாளர்களை தொடர்பு கொள்ளவும். விரைவில் மேன்முறையீட்டை சமர்ப்பிக்கவும். பொருளாதார ஸ்தீரத்தன்மை தேவைப்படும் நபர்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி தமது அரசியல் தேவைகளை நிறைவேற்ற சில தரப்பினரின் முயற்சி மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தகுதியானவர்களை தெரிவு செய்வதில் குறைபாடுகள் இருப்பின் அது உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் எனவும், இது … Read more

நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் ஜூன் 25ஆம், 26ஆம் திகதிகளில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம்..

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 25ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 24ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் ஜூன் 25ஆம், 26ஆம் திகதிகளில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

டெங்கு ஒழிப்புக்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் – உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம

இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். எதிர்வரும் பருவகால மழைவீழ்ச்சியின் போது டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார். தற்போது வரையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர் எனவும் … Read more

தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர இலங்கை அரசினால் மாணவர்களுக்கு கடன் வசதி – பிரதமர்

அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும் சந்தர்ப்பத்திற்கு இணங்க மாணவர்களுக்கு தமது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கு வசதி செய்து கொடுப்பது மிகவும் அவசியமாகும். அது தொடர்பான கடன் முறையில் தற்போது காணப்படும் நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ” கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் இதற்கு முன்னர் இது குறித்து தெளிவு படுத்தியுள்ளார் என குறிப்பிட்டார். இதனை அமைச்சரவையின் அவதானத்திற்கு … Read more

காத்தான்குடியில் பேரீச்சம் பழ அறுவடையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்!

காத்தான்குடியில் அழகுபடுத்தும் (Beautification) நோக்கில் நடப்பட்ட பேரீச்சம் மரங்களின் பயனால் இவ்வருட பழ அறுவடை கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வைபவரீதியாக (23) ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதலாவது அறுவடையை காத்தான்குடி நகரசபை செயலாளர் ரிப்கா சபீன் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி வைத்தார். இதன் போது இறைவனின் அருளால் விளைச்சல் சிறப்பாக உள்ளதாகவும், பள்ளிவாசல்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநர் நகர சபை செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.