யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தானிய விதை விநியோகம்…

கிராமிய மேம்பாட்டிற்கான விவசாய ஊக்குவிப்புத் திட்டத்தின் அடிப்படையில், யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான தானிய விதைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக நேற்று வழங்கி வைத்தார். குறித்த திட்டத்திற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சுமார் 44 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 12 பிரதேச செயலகங்களை சேர்ந்த 646 பயனாளர்களுக்கு பயறு விதைகளும் 294 பயனாளர்களுக்கு உழுந்து விதைகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் சவால்களை முறையாவும் செயல்திறனுடனும் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

மத்திய வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டு வருகின்ற கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட சவால்களை முறையாகவும் செயல்திறனுடம் எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பெரிஸ் நகரில் (22) ஆரம்பமான புதிய நிதி ஒப்பந்தத்திற்கான அமர்விற்கு இணையாக நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இதன்போது கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் அனுபவங்களை எடுத்துரைத்த ஜனாதிபதி, இலங்கை தற்போது வரையறுக்கப்பட்ட நிதி வசதிகள் தொடர்பிலான பிரவேசத்திற்குள் மட்டுப்பட்டு கிடப்பதாகவும் , … Read more

இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு – ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன்

இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் உறுதியளித்துள்ளார். புதிய நிதி ஒப்பந்தத்திற்கான தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்சிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் ஆகியோருக்கிடையில் நேற்று (22) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. நிதி மற்றும் கடன் வழங்கல் … Read more

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகள் தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்கப்படும்

நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான வரைவுகள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்பித்து அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 2048 ஆம் ஆண்டில் நாட்டின் அபிவிருத்திக்கான நோக்கு என்ற திட்டத்திற்கு இணையாக இந்த … Read more

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிலையான கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையான ஒத்துழைப்பு -பொதுச் செயலாளர் நாயகம் ஜனாதிபதியிடம் உறுதியளிப்பு

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் கப்பல் விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணையை ஆரம்பிக்க பாராளுமன்ற விசேட குழு தீர்மானம்

எஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் அது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விரிவான விசாரணையை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அண்மையில் தீர்மானித்தது. அமைச்சர் கௌரவ ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில் இந்த விசேட குழு முதல் தடவையாக கடந்த 20ஆம் திகதி கூடியதுடன், … Read more

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது எதிர்கால உயர் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு பழைய மாணவர்களின் நினைவாக ‘Hall of Fame’ கட்டிடம் திறந்து வைப்பு கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அதன் தொடக்கத்தில் இருந்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக (ஜூன் 23) … Read more

2023-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வு

2023-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வு நேற்று (23) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் கலந்துகொண்டார். அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த செயலமர்வில் ஐ.நா முகவர்கள், சர்வதேச பங்காளிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் … Read more

நாடு எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்க்க விரிவான மூலோபாய திட்டம்

நல்லிணக்க முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். IDU மாநாட்டுடன் இணைந்தாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பருடன் நடைபெற்ற நேர்காணலில் ஜனாதிபதி தெரிவிப்பு.இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும், முக்கியமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிறைவு செய்வதிலேயே … Read more

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக 2023 ஜூன் 21 ஆம் திகதி இரவு வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நாங்கு இந்திய மீன்பிடி படகுகளுடன் 22 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு … Read more