பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதியுடன் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் அவர்கள் நேற்று (22) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சிச்சுக்கு வருகை தந்த பங்களாதேஷின் கட்டளைத் தளபதி அவர்களுக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் ஆகியோரிக்கிடையில் பல்வேறு … Read more

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்

உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் நிகழ்ச்சி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்  (21) இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதி நிதிகளுக்கும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில், 60 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, போஷாக்கான உணவுகளை வழங்கி ஆரோக்கியமான சமூகத்தை … Read more

மாத்தறை மாவட்டத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ‘'உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்” வீட்டு உதவி நிகழ்ச்சித் திட்டம்

‘உங்களுக்கு வீடு – நாட்டிற்கு எதிர்காலம்’ வீட்டுதவி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்திற்கு குறைந்த வருமானம் பெறும் 65 குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிருமாணிப்பதற்காக 65இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கும் வைபவம் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் மாத்தறை மாவட்ட செயலக காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது ஒரு குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் திக்வெல்ல பிரதேச செயலகப் பிரிவின் 23 குடும்பங்களுக்காக 23இலட்சம் ரூபாவும், … Read more

ஒரு நாட்டின் புத்தெழுச்சிக்கு கைத்தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது – பிரதமர் தினேஷ் குணவர்தன.

தேசிய கைத்தொழில் தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்ற Industry 2023 தேசிய கைத்தொழில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய கைத்தொழில் வாரத்துடன் இணைந்ததாக இந்த கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. கண்காட்சியுடன் இணைந்ததாக பிரதமர் தலைமையில் நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டதுடன், கைத்தொழில்துறை … Read more

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டம் காத்தான் குடியில் நேற்று ஆரம்பம்.

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைவிரல் அடையாளம் எடுக்கும் பணி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைவிரல் அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் நேற்று(22) வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர், உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, கணக்காளர் கே சித்ரா உட்பட … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி பணமோசடி செய்வது தொடர்பாக விசேட விசாரணை

தனது தனிப்பட்ட ஊழியர்கள் என அடையாளப்படுத்திக் கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக விசேட விசாரணையொன்று மேற்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய நபர்களுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும், ஒப்பந்தங்களுக்கு தாம் எந்தவிதத்திலும் பொறுப்பல்ல எனறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. தனது அலுவலகத்தில் இருக்கும் எந்தவொரு அதிகாரியும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு போதும் பணம் அறவிடுவதில்லை … Read more

நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை…

பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச முதலீடுகள் மற்றும் நீர்வழங்கல் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் பங்கேற்புடன் அமைச்சில் நடைபெற்றுள்ளது. கொழும்பில் துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘போர்ட்சிட்டி’ க்கு நீர்வழங்கலின் போது முழுமையாக டிஜிட்டல் முறைமையை பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. ‘நீர்வழங்கல் அதிகாரசபை கடந்த காலங்களில் நட்டத்தில் இயங்கி வந்தாலும், அதனை … Read more

ஜனாதிபதியின் சரியான வேலைத்திட்டத்தின் பலனாக அரிசி இறக்குமதிக்காக செலவிடப்பட்ட பெருந்தொகை பணம் மிஞ்சியுள்ளது

20 வருடங்கள் பழமையான நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு செலவிடப்பட்ட 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேபோல் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அரசாங்கத்தின் சலுகைகளை பெற்றுக்கொண்ட பின்பும் அந்த … Read more

அம்பன் நீர்நிலையில் பல இலட்சம் மீன் குஞ்சுகள்

வடமாராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுப்படுத்தும் வகையில் அம்பன் வெள்ளச் சமவெளி எனப்படும் நீர்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திலாப்பியா மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடிப் பிரிவின் நிதி ஒதுக்கீட்டில் சுமார் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் திலாப்பியா குஞ்சுகள் குறித்த நீர்நிலையில் விடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல் கட்டமாக இன்று 75,000 குஞ்சுகள் இடப்பட்டுள்ளன. அதேவேளை, கடற்றொழில் அமைச்சின் … Read more

சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.   2023 ஜூன் 22 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு … Read more