ஜனாதிபதியின் விவசாய நவீனமயப்படுத்தல் திட்டத்தின் ஊடாக ஏற்றுமதி விவசாய பொருளாதாரத்தை உருவாக்குவோம்

வயல் நிலத்திலிருந்து போராட்ட களத்திற்கு சென்ற விவசாயி மீண்டும் வயலுக்குத் திரும்பி தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு செய்கின்றனர் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய விவசாயத்துறையில் தொழில்நுட்பத்தை இணைத்து ஏற்றுமதி விவசாய பொருளாதாரமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன் ஊடாக விவசாய அமைச்சு வெளிநாட்டு வருவாயை ஈட்டும் அமைச்சாக மாறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி … Read more

பூநகரி பிரதேச மட்ட தொழிற்சந்தை நாளை (23) வெள்ளிக்கிழமை

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும், பூநகரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச மட்ட தொழிற்சந்தை நாளை (23) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த தொழிற்சந்தை பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணிக்கு ஆரம்பமாகி பி.ப 1.00 மணிவரை நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட நிகழ்வானது மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் வருடாந்த வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக நடைபெற்று வருகின்றது. பிரதேசத்தில் இருக்கின்ற வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக குறித்த பிரதேச மட்ட தொழிற் … Read more

மட்டக்களப்பில் விவசாய அமைச்சின் கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு இணங்க விவசாய அமைச்சின் கிராமிய பொருளாதார பிரிவினால் கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான கிராமிய ஆடு வளர்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் கிராமங்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆடுகளை வளர்ப்பிற்காக வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஜி .அருணனின் வழிகாட்டலில் நேற்று (21) இடம்பெற்றது. இதன்போது 1.125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், 50 … Read more

மின்சார சபையில் தற்காலிக சேவையின் அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை

இலங்கை மின்சார சபையில் தற்காலிக சேவையின் அடிப்படையில் பணிபுரியும் சுமார் 4000 ஊழியர்களும் எதிர்காலத்தில் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய நாட்களில் இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்படும் மனித வளங்கள் கணக்கெடுப்பு காரணமாக அவர்களை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இங்கு தொடர்ச்சியாக பணிபுரிந்தவர்களை எதிர்வரும் சில மாதங்களில் நிரந்தரமாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் … Read more

'Industry 2023' மாபெரும் வாகானப் பேரணியுடன் ஆரம்பம்

தேசிய கைத்தொழில் தினத்தினை முன்னிட்டு கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கைத்தொழில் கண்காட்சியானது இன்று (22) காலை பத்து மணிக்கு பிரதமரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (21) காலி முகத்திடலில் குறிப்பிட்ட கண்காட்சிக்கான ஆரம்ப நிகழ்வாக 26 உற்பத்தி நிறுவனங்களின் 150க்கும் மேற்பட்ட உள்நாட்டில் கூடியிருந்த வாகனங்களைக் கொண்ட மாபெரும் வாகன அணிவகுப்பு, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்; ரமேஷ் பத்திரன தலைமையில் நடைப்பெற்றது. காலி முகத்திடலில் … Read more

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் அதிகரிப்பு

மலேசியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு மலேசிய உயர் ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் இணக்கம் தெரிவித்துள்ளார். மலேசிய விமான சேவை மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதுடன், எயார் ஏசியா மற்றும் பதிக் எயார் ஆகிய இரண்டு விமான நிறுவனங்கள் கோலாலம்பூருக்கும் கொழும்புக்கும் இடையே விமான சேவைகளை மேற்கொள்ள இணங்கியுள்ளன. மலேசிய உயர் ஸ்தானிகர் திரு. பத்லி ஹிஷாம் ஆதம் நேற்று முன்தினம் (20) அலரி மாளிகையில் பிரதமரைச் … Read more

சட்டம் இல்லாத நாடு இல்லை – பிரதமர் தினேஷ் குணவர்தன

ரூபா 420 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஹொரணை, மதுராவளை உள்ளூராட்சி மன்ற கட்டிடத்தை நேற்று (21) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலும், மதுராவளை, பதுரலிய, வல்லாவிடவில் 738 காணி உறுதிப்பத்திரங்களை உரிமையாளர்களுக்கு வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், இது எமது பழைய கிராமங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் பகுதி. ஏற்றுமதி செய்யப்படும் இறப்பரின் அளவை புள்ளிவிபரங்களில் கணக்கிட்டால், புலத்சிங்களவிற்கு கிடைத்த அரசாங்க ஆதரவு மிகவும் குறைவு. … Read more

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புக்காக அலுவலகங்கள் மற்றும் ஏனைய பகுதிகளை சோதனையிடுவதற்கான வேலைத்திட்டம்

மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், (பல்கலைக்கழகங்கள்/பிரிவேனாக்கள்) ஆகிய இடங்களின் சோதனையிடப்படவுள்ளது. செவ்வாய்கிழமைகளில் தொழிற்சாலைகளும் புதன் கிழமைகளில் வேலைத்தளங்களிலும், வியாழக்கிழமைகளில் ஏனைய தனியார் நிறுவனங்களிலும், வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களிலும், சனி கிழமைகளில் வீடுகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களை அண்மித்த பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிப்பாட்டுத் தலங்களிலும் சோதனையிடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 09 இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் நெடுந்தீவின் ஊரிமுனை கடற்பகுதியில் நேற்று (20) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய பல நாள் மீன்பிடிப் படகொன்றுடன் 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தின் கடற்படையனர் சிறிய படகுகளை பயண்படுத்தி நெடுந்தீவின் தென்பகுதி ஊரிமுனை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் … Read more

இலஞ்சம் கொடுக்கும் குற்றத்தை இழைக்கும் தனியார் துறை நிறுவனம் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தால் தண்டிக்கப்படவுள்ளது

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய சர்வதேச நெறிகள், நியமங்கள் அத்துடன் மிகச் சிறந்த செயல்முறைகள் என்பவற்றுக்குப் பயன்கொடுப்பதற்கும், சுயாதீனமான ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்காக ஏற்பாடு செய்வதற்கும்,சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தலுடன் தொடர்புபட்ட தவறுகள் மற்றும் இணைந்த தவறுகளைக் கண்டுபிடிப்பது போன்ற நோக்கத்தில் கொண்டுவரப்படும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில் தனியார் துறை நிறுவனத்தை குற்றவாளியாக்கும் விதிகள் … Read more