இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் பதில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய பதில் தூதுவர் கொதாரி கட்சுகி அவர்கள் பதில் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (20) இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த திரு கொதாரி அமைச்சர் தென்னகோன் அவர்களினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் இருதரப்பு பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதுள்ள நெருங்கிய உறவுகளை மேம்படுத்துவதில் எவ்வாறு செயல்படுவது … Read more

சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து சாவகச்சேரி மக்களுக்கு குடிநீர் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு நேரடியாக சென்ற அமைச்சர், நேற்று (20) சம்மந்தப்பட் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வரவழைத்து குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார். குறித்த கிணறு சோழர்களினால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலின் மூலஸ்தானத்திற்கான தீர்த்தக் கிணறு என்பது ஆய்வு ரீதியாக … Read more

2023ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தினத்தினை முன்னிட்டு கைத்தொழில் கண்காட்சி

ஓவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படும் தேசிய கைத்தொழில் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை தேசிய கைத்தொழில் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கமைய, கைத்தொழில் அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை மற்றும் தனியார் துறையினர் இணைந்து ஜூன் மாதம் 22ஆம் திகதி … Read more

ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு மாதாந்த உணவு கொடுப்பனவு 

2022 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து இராணுவத்தினரின் மாதாந்த உணவு கொடுப்பனவு தொகையை ஏறக்குறைய பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்க கௌரவ ஜனாதிபதி அவர்கள் பரிந்துரைத்துள்ளார். அதற்கமைய 2023 ஏப்ரல் மாதத்திலிருந்து அனைத்து இராணுவ வீரர்களின் மாதாந்த உணவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு, மே மாதம் முதல் அனைத்து இராணுவ உறுப்பினர்களின் சம்பளத்துடன் வழங்கப்படுகின்றது. போரில் காயமடைந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு … Read more

கொரிய தொழில் வாய்ப்புகளுக்காக பணியாளர்கள் செல்லும் ஸ்ரீ லங்கன் விமானங்களின் தாமதத்திற்கு அமைச்சர் மனுஷவின் நிரந்தர தீர்வு

கொரிய தொழில்வாய்ப்புகளுக்காக பணியாளர்கள் செல்லும் ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு உட்பட்ட விமானம் நேற்றும் தாமதமடைந்ததினால் தொழிலாளர்களை கொரியாவிற்கு அனுப்பமுடியாமை தொடர்பில் ஏற்பட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்காரவினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க கொரிய விமான சேவை நிறுவனம் கொரிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் , இரண்டு மாதங்களுக்குள் கொரியாவுக்கு தொழிலுக்காக செல்லும் தொழிலாளர்களை கொரிய விமான சேவை … Read more

39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு அன்பளிப்பு

ஐக்கிய அமெரிக்காவின் Helpline Lanka 39.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்களை நேற்று (20) சுகாதார அமைச்சுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுஙவினால் குறிப்பிட்ட மருந்து தொகை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வழங்கிவைக்கப்பட்டது. அவற்றில் ஒவ்வாமை, கொலஸ்ட்ரால், மயக்க மருந்து, மூட்டுவலி, நீரிழிவு நோய் மற்றும் வலி நிவாரணி மருந்துகள் உட்பட 32 வகையான மருந்துகள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு ஆதரவளித்து உதவிய அனைத்து நட்பு … Read more

முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதானதேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் ஊடாக வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார். ‘ஸ்திரமான … Read more

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் முக்கிய கலந்துரையாடல் நேற்றையதினம் (20) காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு மற்றும் வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 120 பெண் தொழில் முயற்சியாளர்கள் இக் கலந்துரையாடலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்குவதன் மூலம் பெண்களை பொருளாதாரத்தில் ஒரு ஸ்திர தன்மையில் வைத்திருக்கும் நோக்கில் இவ் செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள் எனவும் … Read more

கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் … Read more

கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.      அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2023 ஜூன் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   மழை நிலைமை:காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய … Read more