கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தீர்வு..

கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஆளுநர் செந்தில் தொண்டமான் அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளார். இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டுள்ள உரப் பற்றாக்குறை தொடர்பாக, ஆளுநர் செந்தில் தொண்டமான், விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாணத்தில் உரப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தின், மூன்று மாவட்டங்களின் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு … Read more

பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு  நடவடிக்கை 

பாடசாலைகளை விட்டுச்செல்லும் மாணவர்கள் குறித்து முறையான தரவு அறிக்கையொன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் மஹரகம பிரதேச செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது பணிப்புரையை விடுத்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர கல்வியை முடித்து பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளைகள் அடுத்தகட்ட கல்வியைப் பெறவில்லை என்றால், அவர்கள் தங்களது தனிப்பட்ட முன்னேற்றத்தை இழக்க நேரிடும் அதே நேரம் அது … Read more

இஸ்ரேலில் செவிலியர் தொழில் வாய்ப்பைப் பெற்ற மேலுமொரு குழுவுக்கு விமான டிக்கெட்டுக்கள் வழங்கி வைப்பு…

இஸ்ரேலில் செவிலியர் தொழில் வாய்ப்பைப் பெற்ற 12 இலங்கையர்களுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்கும் நிகழ்வு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், மனுஷ நாணயக்காராவின் தலைமையில் கடந்த 16 ஆம் திகதி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இஸ்ரேலின் சனத்தொகை மற்றும் இடம்பெயர்வு அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையில் 2020 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி, இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன், 2022 ஆம் … Read more

பிரித்தானிய-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானிய தூதுவர் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன, தனது பதவிக்காலம் முடிந்து செல்லும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று (19) உயர் ஸ்தானிகரை அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உயர் ஸ்தானிகரின் தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டுக்குரியவை என பிரதமர் குறிப்பிட்டார். 2019 ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலத்தில், … Read more

இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றி

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான முதலாவது போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கை அணிகள் இடையிலான உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டி நேற்று (19) ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் பத்தும் நிசங்க 76 பந்துகளில் 57 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 54 பந்துகளில் 52 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் … Read more

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் நடமாடும் ஒருநாள் மருத்துவ சேவை

கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய கிழக்குமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் அனுசரனையுடன் தம்பலகாமம் பிரதேச செயலகமும், தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் இணைந்து நடாத்தும் நடமாடும் வைத்திய சேவையானது நாளை (21.06.2023) புதன்கிழமை காலை 8.30 மணி முதல் 12.30 மணிவரை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போது, இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, பற் சிகிச்சை, வெளிநோயாளர் பிரிவு பொது வைத்திய சேவை, ஆயுர்வேத வைத்திய சேவை, ஆற்றுப்படுத்தல் … Read more

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை

பொய்ப் பிரச்சாரங்களை நம்பி ஏமாறாதீர்கள் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இந்த நாட்டில் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயம், எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். … Read more

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது

யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி மாமுனே கடற்பரப்பில் (16) இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அனுமதி பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமான முறையில் சுழியோடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள், நான்கு (04) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதி … Read more

350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கு நியமனம்

தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பாடசாலைகளிற்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 350 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்களிற்கு நியமனம் வழங்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் (16) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான், வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடமாகாண … Read more

நாட்டில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் தட்டுப்பாடின்றி யூரியா உரம்

நாட்டில் உள்ள அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதல் தற்போது வரை நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய நிலையங்களில் கிடைக்கும் யூரியா உரங்களுக்கு மேலதிகமாக 5,100 மெற்றிக் தொன் யூரியா அனுப்பப்பட்டுள்ளது. இன்று (19) மேலும் 1,000 மெற்றிக் தொன் யூரியா விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 200 மெற்றிக் … Read more