சுகாதாரத்துறை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் – பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க

சுகாதாரத்துறை தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் பங்களிப்புடன் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மயந்த திசாநாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் மருத்துவ வழங்கற் பிரிவு, அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்திக் கூட்டுத்தாபனம், ஆயுர்வேதத் திணைக்களம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதில் … Read more

வலி வடக்கு காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பம்

வலி வடக்கில்; மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013 ஆண்டு காலப் பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக அரசுடமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அடிப்படையில் அரச காணிகளிகளாக சுவிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சுமார் 6300 ஏக்கர் காணிகளில் கணிசமானவை தற்போது விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எனினும், குறித்த காணிகள் சட்ட ரீதியாக இப்போதும் அரச காணிகளாகவே காணப்படுகின்றமையினால், 2013 ஆம் ஆண்டு … Read more

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவதுஅமர்வு ஜனாதிபதி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு 17 மற்றும் 18ஆம் திகதிகளில் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பசிந்து குணரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 131 பேர் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன் … Read more

இந்திய சுற்றுலா பயணிகளை எற்றிய கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது…

இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகைதந்த கப்பல் 16 காலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும்,கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் பால டி சில்வா அவர்களும் வரவேற்றனர். மேலும் காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கும் விடுதி, குடிவரவு – குடியகல்வு கட்டிடத் தொகுதியையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக முல்லைத்தீவு கோக்கிளாய் களப்பு மற்றும் ஜின்னபுரம் கடற்பகுதியில் 2023 ஜூன் 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள், 04 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு … Read more

இலங்கை, இந்திய பயணிகள் போக்குவரத்து சேவைக்காக காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் திறந்து வைப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைக்காக கடற்படையின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் வசதிகள் திறக்கப்பட்டதுயாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்துக் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், அங்கு பயணிகள் முனையம் மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான வசதிகள் திறந்து வைப்பு (2023 ஜூன் 16) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து … Read more

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியை சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுவின் தலைவர் திரு. செவரின் சப்பாஸ், துணைத் தூதுக்குழுத் தலைவர் திரு. அலக்சான்டர் புரொவ் ஆகியோர் வடக்கிற்கான விஜயத்தின் போது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியை புதன்கிழமை (ஜூன் 14) பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தனர். யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தூதுக்குழுவை தளபதி மரியாதையுடன் வரவேற்றார். இந்த சுமூக சந்திப்பின் போது, யாழ் தளபதி மற்றும் வருகை தந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் சிவில்-இராணுவ … Read more

“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” ஜனாதிபதியிடம் கையளிப்பு

“தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” இனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு (16) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் மேற்படி வரைவு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அதன் கீழான ஏனைய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக “தேசிய பௌதீக திட்டமிடற் கொள்கை வரைவு – 2048” தயாரிக்கப்பட்டுள்ளது. … Read more

வடக்கு, கிழக்கில் காலை வேளையில் மழையுடனான காலநிலை…

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் மாதம் 17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும். காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும், பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை … Read more

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒருகொடவத்தை – அம்பத்தளை வீதியின் (Low level Road) புனரமைப்புப் பணிகளை 03 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த செயற்திட்டத்தின் தாமதத்திற்கு காரணமான விடயங்கள் தொடர்பில் தனித்தனியாக ஆராய்ந்து, எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்த ஜனாதிபதி, திட்டப் பணிகள் பாதிக்கப்படுவதற்கு மக்களின் பிரச்சினைகள் காரணமாக அமைந்திருந்தால், அவற்றுக்குத் தீர்வு காண முன் வருமாறு அப்பகுதி அரசியல் பிரமுகர்களுக்கு அறிவுறுத்தினார். நேற்று (16) முற்பகல் … Read more