சுவிஸ் பாதுகாப்பு ஆலோசகர் யாழ்ப்பாண தளபதியை சந்திப்பு

கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் பிலிப் கரோக்ஸ் அவர்கள் திங்கட்கிழமை (ஜூன் 12) யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்தார். யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகரை அன்புடன் வரவேற்றார். இந்த சுமூக சந்திப்பின் போது, தளபதி மற்றும் கர்னல் கர்ராக்ஸ் பிரான்சுவா … Read more

குற்றவியல் அவதூறுச் சட்டத்தை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கமாட்டேன் என ஜனாதிபதி உறுதியளிப்பு

இணைய முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம். டிஜிட்டல் மயமாக்கல் அனைத்து அரச துறைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி. வலயத்தின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறாதவாறு குற்றவியல் அவதூறு சட்டத்தினை நீக்கிய தான் ஒருபோதும் கருத்துரிமையை பறிக்கும் வகையில் செயற்படப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். உத்தேச ஔிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக எவருக்கேனும் நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க வழி ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். உலகின் … Read more

யாழ்ப்பாண புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி,

மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸடவி யுஎஸ்பி என்டியு பீஎஸ்சி அவர்கள், திங்கட்கிழமை (ஜூன் 12) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியாக பதவியேற்றார். யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில், இலங்கை இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் ‘மகா சங்க’ … Read more

விவசாய அமைச்சினால் மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை முன்னேற்ற நடவடிக்கை

விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்தல் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. காலமதி பத்மராஜாவின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான வழிகாட்டுதல், கண்கானித்தல், மதிப்பிடுதல் … Read more

புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஜனாதிபதிக்கு அழைப்பு

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாடு பிரான்ஸின் பெரிஸ் நகரில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ‘தற்போதைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது. உலக சமூகத்தை பாதித்துள்ள பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இந்த மாநாட்டின் ஊடாக … Read more

2023 ஆம் ஆண்டு தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15

பாடசாலைகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்படும் புலமைப் பரிசில் பரீட்சை, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடாத்ததப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு…  

7500 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நாளை நியமனம்

7500 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நாளை (16) புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த கடந்த 14 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்… ஆசிரியர் நியமனம் தொடர்பாக பலர் மேன்முறையீட்டுக்கு வருகின்றனர். அந்த மேன்முறையீடுகள் எதனையும் நாங்கள் பரிசீலிக்க மாட்டோம். ஆசிரியர் பற்றாக்குறையான இடங்களை ஆராய்ந்து அவ்விடங்களுக்கு நியமனங்களை மேற்கொண்டுள்ளோம். எந்த அரசியல்வாதி வந்தாலும், அதற்கு இடமளிக்க மாட்டேன். அத்துடன், … Read more

டெங்கு ஒழிப்புக்கான மேல்மாகாண உப குழு கூடியது

டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த காய்ச்சல் நோயாளிகள் அனைவரையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பது முக்கியம். தற்போதைய சூழ்நிலையில் நோய்க்காரணி மற்றும் வைரஸின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – டெங்கு ஒழிப்பு நிபுணர் குழுவின் தலைவி இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல வலியுறுத்தல். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நுளம்புகள் மூலம் டெங்கு பரவுவதால், அனைத்து காய்ச்சல் நோயாளிகளையும் நுளம்புகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்ல வேண்டும் என டெங்கு … Read more

மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் வட்டானா பருப்பின் புதிய விலை ரூ.275.00. ஆகவும், ஒரு கிலோ கிராம் கோதுமை மா 195.00 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 295.00 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் வறுமையை ஒழிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் லங்கா சதொச நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் உன்னத இலக்குடன் மேற்குறிப்பிட்ட மூன்று வகையான அத்தியாவசியப் … Read more

தற்போதைய தொழில் சட்டத்தில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் –  அமைச்சர் மனுஷ நாணயக்கார

தற்போதைய தொழில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பொது மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் சுமார் 20 விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கடந்த சில தினங்களில் பெருந்தோட்டப் பகுதியில் மூன்று தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாப்பை உறுதி செய்யும் நடை முறையில்லை. இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட தொழில் சட்டங்களே … Read more