நாட்டை முன்னேற்றக் கூடிய முக்கிய வளம் மனித வளம்

க.பொ.த (உயர்தர) பரீட்சை நடத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட மாதமொன்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படும். அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் தரத்தை ஆராய பொறிமுறையொன்று அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்தல். உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை அடைவதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிற்கு தேவை … Read more

உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் சாதனை படைத்த இராணுவ மருத்துவர்கள்

உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சிறுநீரகக் கல்லை (கல்குலி) அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பணி (ஜூன் 1) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இடம் பெற்றது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தது. கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர் சிறுநீரக மருத்துவ நிபுணர் லெப்டினன் கேணல் (வைத்தியர்) கே. சுதர்ஷன், கெப்டன் (வைத்தியர்) டபிள்யூபீஎஸ்சி பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமாஷா பிரேமதிலக ஆகியோர் சத்திரசிகிச்சையை முன்னெடுத்தனர். கேணல் (வைத்தியர்) யூஏஎல்டீ பெரேரா மற்றும் … Read more

யாழ்ப்பாண புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி

மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸடவி யுஎஸ்பி என்டியு பீஎஸ்சி அவர்கள், திங்கட்கிழமை (12) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியாக பதவியேற்றார். யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில், இலங்கை இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் ‘மகா சங்க’ உறுப்பினர்களின் … Read more

மக்கள் நலத் திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. – அமைச்சர் டக்ளஸ் ஆணித்தரம்

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கும் நாட்டிற்கும் எவ்வாறான நன்மைகளை கூடியளவு விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதிலேயே தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் கால இழுத்தடிப்புக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த காலங்களிலும், இன்றைய சந்திப்பிலும் மக்கள் பிரதிநிதிகளினாலும் அதிகாரிகளினாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் – ஆலோசனைகள் மற்றும் வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை தெளிவான முறையில் அடையாளப்படுத்தி, … Read more

இலங்கையின் உணவு பாதுகாப்பின்மை தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு

இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம்(WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். உலக உணவு வேலைத்திட்ட உதவிச் செயலகத்தின் (PSWFPC) … Read more

வர்த்தக வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து திருகோணமலை ஏறக்கண்டி பிரதேசத்தில் 2023 ஜூன் மாதம் 12 ஆம் திகதி இரவு மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக விற்பனைக்கு கொண்டு சென்ற வாட்டர் ஜெல் எனப்படும் வணிக வெடி குச்சிகள் நாற்பத்தைந்துடன் (45) சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார். வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை … Read more

தடைசெய்யப்பட்ட 300 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் வவுனியாவில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஜூன் மாதம் 11 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக எடுத்துச் சென்ற Pregabalin வகையின் முந்நூறு (300) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தின் கடற்படையினர், மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையில், … Read more

கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் தொழில் உபகரணங்கள் விநியோகம்

அரசாங்கத்தின் கிராமத்தினுடனான கலந்துரையாடல் 2020/2021 காலப்பகுதிக்கான வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமது தொழிலை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் (12) இடம்பெற்றன. கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டு கோளின் பேரில் மண்முனை மேற்கு பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 46 பயனாளிகளுக்கான உபகரணங்கள் இரண்டாங்கட்டமாக இன்று வழங்கப்பட்டன. இதன்போது குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 37 … Read more

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடி கப்பலில் இருந்த மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட கடற்படையினருக்கு பாராட்டுக் கடிதங்கள் வழங்கப்பட்டன

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த ‘LU PENG YUAN YU 028’ என்ற சீன மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர்களை மீட்பதற்காக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருந்தபோதிலும் இலங்கை கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு சுழியோடி நடவடிக்கை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. மேலும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் … Read more

வெலிசர பொருளாதார மத்திய நிலையம் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்… – கலாநிதி பந்துல குணவர்தன.

வெலிசர பொருளாதார மத்திய நிலையம் சம்பவம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டவர்களிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து 02 வாரங்களுக்குள் முடிவுகளை பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மீகொட, வெலிசறை, … Read more