டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது

தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையானது கற்பனைகளை மையமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தேசிய பாதுகாப்பு என்ற சொல்லை அவர்கள் போராட்டத்திற்கான தொனிப்பொருளாக மாற்றிக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்படும் … Read more

சப்ரகமுவ மாகாண புதிய ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமனம்

சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவித்த நவீன் திஸாநாயக்க,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிற்காக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார். கடந்த காலங்களில் நாடு கடுமையான நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த போதிலும் ஜனாதிபதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரியான திட்டங்களின் பலனாக சாதகமான மாற்றங்களை காண முடிவதாக சுட்டிக்காட்டிய … Read more

உள்நாட்டில் முட்டை உற்பத்தியை அதிப்பதே ஒரே தீர்வு… – அமைச்சரவைப் பேச்சாளர்

உள்நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதே, முட்டை விலை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கான ஒரே தீர்வு என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முட்டை தட்டுப்பாட்டை தற்காலிகமாக போக்க ஒரு தொகையை இறக்குமதி செய்து சந்தையில் வழங்க முடியும், இது போட்டித்தன்மையை உருவாக்கும், … Read more

கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதிகளுக்காக செலுத்தும் கட்டணங்களை ஒன்லைன் ஊடாக செலுத்தும் வசதி

கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதிகளுக்காக செலுத்தும் கட்டணங்களை ஒன்லைன் ஊடாக செலுத்தும் வசதி நேற்று (12) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் திணைக்களமானது சுமார் 45 வகையான அனுமதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இதுநாள்வரை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்காக நேரடியாக திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்தே அரசுக்கு கட்டணங்களை செலுத்துவது வழமயாக இருந்தது. எதிர்காலத்தில் இக் கட்டணங்களை இணையத்தளம் ஊடக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதானது பயனாளிகளுக்கு வசதியாக அமையும் என்பது மகிழ்ச்சியான விடயம் … Read more

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்

2023ஆம் வருடத்திற்காக அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது காலநிலை காரணமாக டெங்கு எச்சரிக்கையைக் கருத்திற்கொண்டு இன்று (12) மற்றும் நாளை (13) டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை சகல மாகாணங்களையும் உள்ளடக்கியதாக பாடசாலை சமூகத்தின் ஆதரவுடன் நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்டிருந்த பாடசாலைகளில் நீர் தேங்கியுள்ள மற்றும் கழிவு நீர் வழிந்தோடும் காண்கள், குப்பைகளை சேகரித்து நுளம்பு … Read more

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் டெங்கு நோய்…

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் அதிகரித்துவருவதை தரவுகளில் இருந்து பார்க்கக்கூடியதாக உள்ளது என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுனர் நிமல்கா பன்னிலஹெட்டி தெரிவித்துள்ளார். நேற்று (11) மட்டக்களப்பில் கிழக்கு மாகாண வைத்திய அதிகாரி அலுவலக எல்லைக்குட்பட்ட பல பிரதேசங்களில் பதிவாகியுள்ள டெங்கு தொற்று நிலைமை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தொற்றானது இன்னும் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், டெங்கு நோய்க்கு … Read more

அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் உபகரணங்கள் விநியோகம்

அரசாங்கத்தின் கிராமத்தினுடனான கலந்துரையாடல் 2020/2021 காலப்பகுதிக்கான வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமது தொழிலை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் இன்று(12) இடம்பெற்றன. கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சிபாரிசிற்கு இணங்க மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணங்க, பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 46 பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதன்போது பிரதித் … Read more

இலங்கையின் குடிநீர் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை….

இலங்கையில் நிலத்தடி நீரின் தரம் குறைவடைந்துள்ளதால் மக்களுக்கு சுகாதார ரீதியில் ஏற்படும் பாதிப்புகளை இனங்கண்டுகொள்வதற்கான ஆய்வு நடவடிக்கையை பரந்தளவில் மேற்கொள்வது தொடர்பிலும், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஐ.நாவின் நிலையான அபிவிருத்தி இலக்குகளின் கீழ் நாட்டில் நீர் மற்றும் சுகாதாரத்தை உகந்த மட்டத்தில் பேணுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் தேசிய முயற்சியை வலுப்படுத்துவதற்கு, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன், சீன ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான அகாடமியால் நாட்டில் பல விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட … Read more

நாட்டின் சில பகுதிகளுக்கு 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி….

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

நாட்டின் பல்கலைக்கழகக் கட்டமைப்பின் தரமும் நற்பெயரும் உலகின் முன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி

அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் … Read more