இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க புதிய ஒப்பந்தம் கைசாத்து

இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பீ.டீ.யூ.கே.மாபா பத்திரன மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் தலைவர் ஜெஸ்டின் டிவிஸ்(Justion … Read more

வடமேல் மாகாணத்திலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை …

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 08ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் … Read more

கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்ததாக மென்டரின் தோடைச் செய்கை வலயம்

கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியதாக மென்டரின் தோடைச் செய்கை வலயமொன்றை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2023ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி புதிய பயிர் திட்டத்தை அரம்பிப்பதற்காக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது. தற்போது நாட்டில் தோடை உற்பத்திப ல மாவட்டங்களில் இடம்nறுவதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மென்டரின் இன தோடைக்கு பொது மக்களிடம் பாரிய கேள்வி காணப்படுகிறது. இந்தத் தோடை இறக்குமதிக்காக வருடாந்தம் பாரிய … Read more

மக்கள் எதிர்பார்க்கும் வங்கி வட்டி வீத குறைப்பு விரைவில் நடைபெற எதிர்பார்க்கப்படுகிறது – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

பணவீக்க விகிதம் குறைவடையும் வேகத்தை எதிர்பார்த்ததை விட வேகமாக இடம்பெறுவதாகவும், அதற்கிணங்க விரைவில் மக்கள் எதிர்பார்க்கும் வங்கி வட்டி வீதம் குறைதலானது விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்ப்பதாக சமுர்த்தி, உள்ளுர் பொருளாதார, சிறு நிதி, சுயதொழில், வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இன்று (08) பாராளுமன்ற உறுப்பினர் லலித் வர்ணபுர முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்: கடந்த மே … Read more

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் தலைவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் , செம்பிறைச் சங்க சம்மேளனம் (IFRC) ஆகியவற்றின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று (07) காலை நடைபெற்றது. எதிர்வரும் ஜூன் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்க சம்மேளளத்தின் தலைவர்களுக்கான மாநாடு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்த மாநாட்டில் தெற்காசியாவிற்கான உலக அனர்த்த அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டதோடு (WDR 2022) அதன் பிரதியும் … Read more

பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு குறைந்த விலையில் ஐஸ் விநியோகிக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு

பேலியகொடை மத்திய மீன் சந்தைக்கு 50 கிலோ ஐஸ் கட்டியொன்றை 500 ரூபாவிற்கு விநியோகிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐஸ் உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை வழங்கியூள்ளார். கடற்றொழில் அமைச்சில் (06) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். பேலியகொடை மத்திய மீன் விற்பனை சந்தைக்கு 50 கிலோ எடை கொண்ட ஐஸ் கட்டிகளை 850 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக அமைச்சரிடம் வர்த்தகர்கள் முறையிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஐஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட அமைச்சர் … Read more

வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பகலுணவிற்காக 19.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – கல்வி அமைச்சர்

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்குப் பகலுணவு வழங்குவதற்கு 19.1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர,; இப்பகலுணவுத் திட்டத்திற்காக குறிப்பாக 200இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும், நாடு பூராகவும் உள்ள 7800 பாடசாலைகளுக்கு பகலுணவு வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன. இதற்கான சிபாரிசை நிதி ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதற்கான நிதி திறைசேரியிலிருந்து … Read more

அரச சேவை டிஜிட்டல்மயமாக்களுக்கு விசேட முகவர் நிறுவனமொன்று நிறுவப்படும் – ஜனாதிபதி

அரசாங்க நிதிக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிக்குமாறு ஜனாதிபதி முன்மொழிவு இலங்கையில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களின் தரவுகளையும் கண்காணிப்பதற்காக “கணினி செயலிகளை ” உருவாக்குவதற்கு டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனமொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை காலமும் அரச நிறுவனங்களுக்காக “கணினி செயலிகளை” உருவாக்கும் பணி தனியார் நிறுவனங்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊக்குவிப்பு முகவர் நிறுவனங்களினாலேயே இந்த செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை … Read more

இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த அனைத்து பங்குதாரர்களும் ஆக்கபூர்வமான கருத்தாடலில் ஈடுபட வேண்டும் –  சாகல ரத்நாயக்க

இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற 20 ஆவது ஷங்ரிலா உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். ஆசியாவின் பிரதான பாதுகாப்பு மாநாடுகளில் ஒன்றான Shangri-La Dialogue சிங்கப்பூரில் ஜூன் 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை … Read more

போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்திற்கான நவீன போக்குகளுக்கு உகந்த புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு வர்த்தக சமூகத்தின் பாராட்டு போட்டித்தன்மையுள்ள பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக காணிச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள், முதலீட்டுச் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சட்டங்கள் தொடர்பில் விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என கலாநிதி ஆர். எச். எஸ் சமரதுங்க வலியுறுத்தினார். அதற்கான சட்ட வரைபு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நுவரெலியாவில் நடைபெற்ற 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் கலந்து … Read more