சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் விசாரணைகளில் ஏற்படும் காலதாமதங்களைத் தவிர்ப்பது தொடர்பில் சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான காலதாமதத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் சமூக, மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் குழு தீர்மானித்தது. சிறுவர், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ தலதா … Read more

ஆசிரியர் பற்றாக்குறையை நீக்க 39,000 ஆசிரியர்கள்

கடந்த டிசம்பரில் ஏனைய வருடங்களை விட இருமடங்கு ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக பாரிய ஆசிரியர் பற்றாக்குறையொன்று ஏற்பட்டுள்ளது. இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 39,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார். நேற்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…. எதிர்வரும் 16ஆம் திகதி 7500 … Read more

வெளிவிவகார அமைச்சர் அலி சபிரியுடன் கிழக்கு  மாகாண ஆளுநர் விசேட கலந்துரையாடல்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று (06) கொழும்பில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின்  நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  கோரிக்கை முன்வைத்துள்ளார்.   ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு … Read more

டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (05) இடம் பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குவை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வருவதுடன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டமாக காணப்படுவதனால் அதிகமாக டெங்கு நுளம்பு பரவக்கூடிய பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை … Read more

“ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு – சபாநாயகர்

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (06) சபையில் அறிவித்தார். “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ்வருமாறு, சட்டமூலத்தின் 1, 2(1)(f), 2(2), 3(2), 4(1)(a), 4(1)(b), 4(3), 17(1), 21, 31(2), 163(2)(h), 40, 48(3), 49(1)(f), … Read more

பாடசாலை மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்குகளை (E-mail) உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம் – பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பாராளுமன்றக் குழுவில் தெரிவிப்பு

• கையடக்கத் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும்போது இலங்கைத் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பதிவுடன் கையடக்கத் தொலைபேசிகளை வாங்கவும் – இலங்கை பொலிஸ் பாடசாலை மாணவர்களுக்காக மின்னஞ்சல் (E-mail) கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்யாது மாணவர்களின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தெரிவித்தனர். கடந்த காலங்களில் இணையவழிக் கல்வி பிரபலமடைந்தமையால் பிள்ளைகளின் பயன்பாட்டுக்காக கையடக்கத்தொலைபேசிகள் உள்ளிட்ட … Read more

உத்தேக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்தில் பாதகமாக ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டவும் – ஊடகத்தறை அமைச்சர்

இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக இரகசியம் ஏதும் இல்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் … Read more

மோட்டார் போக்குவத்துத் திணைக்களத்தில் பணம் செலுத்தி அனுமதிப்பத்திரம் கிடைக்காதவர்கள் இருப்பின், அது தொடர்பான துரித விசாரணை…

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணம் செலுத்தி அனுமதிப்பத்திரம் பெறாதவர்கள் இருப்பின், அது தொடர்பாக துரித விசாரணை ஒன்றை நடத்தி, அவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளருக்கு அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… … Read more

43 வருடங்கள் பழமையான சுற்றாடல் சட்டத்தை திருத்தம் செய்ய முற்படும் ஜனாதிபதியின் முயற்சி பாராட்டுக்குரியது – சுற்றாடல் ஊடகவியலாளர் அருண டயஸ்

‍நாட்டில் காணப்படும் 43 வருடங்கள் பழமையானதான சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு சுற்றாடல் ஊடகவியலாளர் அருண டயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக இலங்கையில் நிறுவப்படவிருக்கும் காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான பல்கலைக்கழகம் முழு உலகயும் இலங்கையை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் நேற்று (05) கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2048 இல் பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான … Read more

கௌரவ சபாநாயகர் மற்றும் துருக்கி ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

துருக்கியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டி அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அதிமேதகு ரஜப் தையிப் அர்துகான் (Recep Tayyip Erdoğan) பதவியைப் பொறுப்பேற்கும் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் அந்நாட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்புக்கமைய கௌரவ சபாநாயகர் (ஜூன் 04) கலந்துகொண்டார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையில் பல வருடங்களாகக் காணப்படும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்ததுடன், அண்மையில் உலகையே உலுக்கிய துருக்கிய நிலநடுக்கத்தில் … Read more