நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருகிறது…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 06ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 05ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, நாலக களுவவ நியமனம்

இலங்கை நிருவாக சேவையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரியான நாலக களுவவ இன்று (05) பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்தவினால் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக சேவையில் 23 வருட அனுபவமுள்ள இவர், இதற்கு முன்னர் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாகவும், ஜனாதிபதியின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்த அனுபவம் வாய்ந்த அதிகாரி ஆவார். அவுஸ்திரேலியாவின் கென்பரா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் பொது … Read more

நாடு முழுதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை…..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 05ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜூன் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

இலங்கை மற்றும் மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு 2023 ஜூன் 06 முதல் 07 வரை கொழும்பில் உள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி, 2023 ஜூன் 07ஆந் திகதி மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் கூட்டு ஆணைக்குழுவின் இணைத் தலைவராக இணைந்து செயலாற்றவுள்ளார். 2023 ஜூன் 06ஆந் திகதி நடைபெறவுள்ள கூட்டு ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான கூட்டமானது, அமைச்சர்கள் மட்டத்திலான … Read more

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் (03) நடைபெற்ற சட்டத்தரணி கள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே … Read more

ஜனாதிபதி அலுவலகத்தின் ஏற்பாட்டில் ஐஸ் கிரீம் தன்சல்

புனித மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவு கூறும் முகமாக ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிரீம் தன்சல் (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி தன்சல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரியவும் கலந்துகொண்டார். நேற்று (04) மாலை 5:00 மணிக்கு அதே இடத்தில் தன்சல் வழங்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது

பொது மக்களில் பெரும்பாலானோருக்கு தேர்தல் மற்றும் அரசியல் மீது தற்போது நம்பிக்கையில்லை. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதே மக்களின் தேவையாகும் – தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி உரை. பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை … Read more

இந்திய ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் … Read more

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 07 கைதிகளுக்கு விடுதலை!!

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று (03)  மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 07 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத ஒரு பெண் கைதி உள்ளிட்ட 6 ஆண் கைதிகளுமாக 7 கைதிகள் இன்றைய தினம் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை … Read more

மட்டக்களப்பில் ஏற்றுமதி நோக்கிய கக்கரிக்காய் உற்ப்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு

விவசாய நவின மயமாக்கல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் உள்வாங்கப்பட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்ததி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்ததில் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்ட விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதனை நிவர்த்தி செய்யக்கூடிய … Read more