டெங்கு நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் அறிவுறுத்தல்

டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் தலையிட்டு துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளுநர்களிடம் தெரிவித்தார். ஆளுனர்கள், மாகாண சபை செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்கள், மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட சூம் தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், டெங்கு பரவல் தொடர்பான தகவல்களை சேகரித்து நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் … Read more

கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் 

கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்தமையினால் காடுகளாக மாறியிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் மக்கள் குடியிருப்புக்களும் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தினாலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக, துறைசார் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா … Read more

கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப் போவதில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

இலங்கை கடற்பரப்புக்குள் வளங்களை அழிக்கும் எவ்விதமான நடவடிக்களையும் அனுமதிக்கப்போவதில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து வருகை தந்து சந்தித்த தமிழ்நாடு அரச சார்பற்ற நிறுவனத்தின் மீன்பிடி முகாமைத்துவ ஆராச்சி நிலையத்தின் இயக்குநர் திரு. விவேகானந்தன் அவர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கை கடற்பரப்புகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியையும், கடல் வளங்கள் அழிப்பையும் தடுத்து நிறுத்த பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதெல்லாம் தமிழ்நாட்டு … Read more

தேசிய பொருளாதாரத்துக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வழங்கும் பங்களிப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடல்

• வரி மேன்முறையீட்டுக்கு விசேட நீதிமன்ற முறைமை அரசாங்கத்துக்கு அறவிடப்பட வேண்டிய சுமார் 950 பில்லியன் ரூபாய் தொகையில் மேன்முறையீடு மற்றும் எதிர்ப்பு இல்லாத சுமார் 270 பில்லியன் ரூபாய் தொகையை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நடவடிக்கை எடுக்காமை குறித்து தேசிய பொருளாதார மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் அண்மையில் (23) இடம்பெற்ற இந்தக் குழுக் கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு … Read more

அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சி

அமரர். ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.காவின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியொன்று நேற்று (25) திறந்து வைக்கப்பட்டது. அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று (25) முதல் ஒரு வாரக்காலத்துக்கு நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கமைய  நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு சௌமியபவனில் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. இதனை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் (கண்டி) கலாநிதி எஸ்.ஆதிரா … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 26 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை:கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும். காற்று:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு (20-30) கிலோமீற்றர் … Read more

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையேயான சந்திப்பு நேற்று (24.05.2023) கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடிப் படகுகளில், VMS எனப்படும் படகுகளை கண்காணிக்கும் கருவி பொறுத்தப்பட்டிருப்பதன் அவசியத்தையும், … Read more

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா 24 மற்றும் 25ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் திறந்த மைதானத்தில் இடம்பெறுகிறது. மூன்று அமர்வுகளில் இடம்பெறும் இந்நிகழ்வில் 2500 இளமாணிப் பட்டம், 1286 பட்டப்பின் படிப்பு மற்றும் 03 விசேட பட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். இந்நிகழ்வு நேற்று (24) முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளில் இடம்பெற்றதுடன், இன்று (25) முற்பகல் ஒரு அமர்வுமாகவும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மூன்றாவது அமர்வின் போது … Read more

இன்றைய பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற அமர்வு இன்று (25) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. டபிள்யூ.பி.டி. தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அதனையடுத்து, பி.ப. 12.30 முதல் பி.ப. 5.00 மணி வரை, (i) 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் கட்டளை,(ii) 2004 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,(iii) … Read more

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடவடிக்கை

சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான பயனாளர்களின் தெரிவின் போது முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என வழிவகைகள் பற்றிய குழுவில் வலியுறுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் கூடிய வழிவகைகள் பற்றிய குழுவிலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அஷ்வசும கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழுவுக்கு விளக்கமளித்தனர். இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் … Read more