கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 55 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்கும் நோக்கில்இ அம்மாவட்டத்தில் உள்ள 55 பட்டதாரிகளுக்குஇ மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால்இ நேற்று (23) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற் கட்டமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்போது உரையாற்றிய ஆளுநர் செந்தில் தொண்டமான்… ‘நாட்டில் தற்போதைய பொருளாதார சிக்கல் காரணமாக போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்துள்ளது. அதற்கிணங்கஇ … Read more

LPL தொடர் ஏலத்துக்கு முன்னர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள்

இலங்கையில் 4ஆவது தடவையாக நடைபெறவுள்ள LPL தொடருக்கான ஏலத்துக்கு முன்னர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இவ் LPL போட்டியின் 4 ஆவது தொடர் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 20 வரை நடைபெறவுள்ளது. கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்: பாபர் அசம், மதீஷ பத்திரன. நசீம் ஷா, சாமிக்க கருணாரத்ன தம்புள்ள ஓரா: மெதிவ் வேட், குசல் மெண்டிஸ், லுங்கி என்கிடி, அவிஷ்க பெர்னாண்டோ ஜப்னா … Read more

உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

சமுர்த்தி உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக பெருந்தோட்ட மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இது உண்மை கிடையாது. இம்முறை உரிய வகையிலேயே பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உதவி திட்டங்களை பெறுவதற்கு தகுதியான அனைவருக்கும் அது கிடைக்கும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (22) நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு … Read more

சிலாபம் களப்பை அழிவிலிருந்து பாதுகாக்க அமைச்சர் டக்ளஸ் விரைவான நடவடிக்கை

சிலாபம் களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, கடற்றொழில் அமைச்சர்; டக்ளஸ் தேவானந்தாவுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று (22) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த விசேட சந்திப்பின்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்… களப்பு பகுதியில் மணல் நிறைந்து காணப்படுதல், அதனால் அப்பிரதேசத்தில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசுதல், பண்ணைகளில் இறால் வளர்ப்பு செய்வோர் பயன்படுத்தும் நீர் மீண்டும் களப்புடன் கலக்கப்படுதல் … Read more

உர மானிய வவுச்சர் விநியோகம் நேற்று முதல் ஆரம்பம்

சிறு போகத்தில் நெல் பயிரிடும் மக்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் நோக்கில் அவர்களுக்கு அவசியமான இரசாயன அல்லது சேதனப் பசளையைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டு நிவாரணத்தை வவுச்சராக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு இணங்க இந்நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அதன்படி நெல் விவசாயம் மேற்கொள்ளும் ஒரு ஹெக்டயர் நிலத்திற்கு 20,000 ரூபா மற்றும் இரண்டு ஹெக்டயர்களுக்கு 40,000 ரூபா … Read more

மேல் மாகாண கூட்டுறவு சட்டத்தை வலுப்படுத்தும் வரைவை விரைவுபடுத்த வேண்டும் – பிரதமர்

கூட்டுறவுச் சங்கங்கள் வீழ்ச்சி நோக்கிச் செல்லும் போது அவற்றை மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உறுப்பினர்களால் நீண்டகாலமாக கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பது நியாயமானதா என பிரதமர் தினேஷ் குணவர்தன மேல் மாகாண கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில் அரச அதிகாரிகள் அதற்கேற்ப செயற்பட வேண்டும் எனவும், மேல்மாகாண கூட்டுறவு சட்டம் பலமானதாக இல்லை எனத் தெரியவந்திருப்பதால் அதனை மாற்றுவதற்கான ஆரம்ப வரைவை … Read more

உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்

உயர் தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது 63 பாடங்களுக்குமான மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேலும், 12 பாடங்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு உதவியாக நிற்கின்ற பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்திற்கு, ஆசிரியர் சங்கத்திற்கு மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் … Read more

28ஆவது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க(COP 28) ஜனாதிபதிக்கு அழைப்பு

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP … Read more

பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்

பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர அவர்கள் இன்று (23) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய பதவியில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக் காலை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ரோஹனதீர அவர்களை, பாராளுமன்ற உதவிச் செயலாளர்களான டிக்கிரி கே.ஜயதிலக மற்றும் ஹங்ச அபேரத்ன ஆகியோர் வரவேற்றனர். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதிய செயலாளர் நாயகம் பதவிச் சத்தியம் செய்துகொண்டதுடன், மகா சங்கத்தினர் ஆசீர்வதித்து மத அனுஷ்டானங்களை மேற்கொண்டனர். இதனைத் … Read more

தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கு விசேட பிரிவு

ஒரு நபரின் தனியுரிமைக்கும் அவரின் நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செயற்படுமிடத்து, அது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டால், அவற்றை உடனடியாக விசாரிப்பதற்கான விடே பிரிவொன்றை பாதுகாப்புப் பிரிவு தாபித்துள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், குற்றச் … Read more