புதிய அபிவிருத்தி செயற்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு தேசிய அபிவிருத்திக்குழு

புதிய அபிவிருத்தி செயற்திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு தேசிய அபிவிருத்திக்குழு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும், இரண்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொண்ட செயற்திட்டம் ஒன்றை பாராளுமன்றத்தின் முறையான அனுமதியின்றி இடைநிறுத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் … Read more

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை இரத்து செய்தல்

அரை சொகுசு பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவையை இரத்து செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட கொள்கை தீர்மானத்தின் பிரகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்துக்கான அரை சொகுசு பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் 2023.06.30 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அனுமதி பெற்றவர்களின் சம்மதத்துடன் மற்றும் ஒரு சேவைக்காக மாற்றி அமைக்கப்படும் என குறித்த அனுமதி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரை சொகுசு பயணிகள் சேவை அனுமதிகள் 2023.06.30 ஆம் திகதிக்கு முன்னர் வேறு சேவைக்கு மாற்றியமைக்கப்பட … Read more

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார். சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார். மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் ( Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் … Read more

திருகோணமலையில் குடிநீர் விநியோகத்திற்கான குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

திருகோணமலை பகுதியில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை நிலாவெளி, சம்பல்தீவு மற்றும் ஆனந்தகுளம் ஆகிய பகுதிகளை இணைக்கும் குடிநீர் விநியோகத்திற்கான குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 67.3 மில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியின் ஊடாக மேற்கொள்ளப்படும் இத்திட்டம் 28 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டது. இந்த திட்டம் நிறைவடைந்தவுடன் 300ற்கும் அதிகமான புதிய குடிநீர் இணைப்புகள் … Read more

திரிபோஷ உற்பத்திக்கு தேவையான சோளத்தின் இறக்குமதி வரி குறைப்பு – அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய

திரிபோஷ உற்பத்தி நிறுவனத்திற்காக, இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி, குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிடிய தெரிவித்துள்ளார். இதன்படி, சோள இறக்குமதியின் போது சுமத்தப்பட்டுள்ள விசேட வர்த்தக வரி கிலோ ஒன்றிற்கு 75ரூபாவிலிருந்து 25 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவிஸ்ஸாவெல தல்துவ பிரதேசத்தில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகத்திற்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்… கடந்த 18ஆம் திகதியிலிருந்து நடைபெறும் … Read more

சீனாவிடம் இருந்து கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய் – நாளை மீனவர்களுக்கு இலவச விநியோகம்

அண்மையில் சீன அரசாங்கத்திடம் இருந்து இலவசமாக கிடைக்கப் பெற்ற மண்ணெண்ணெய், மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நாளை (23) காலை 8 மணியளவில் பாணந்துறை மீன்படி வளாகத்தில் இடம்பெறவுள்ளளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன் ஆகியோரின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதன்போது, மண்ணெண்ணெய் எரிபொருளைப் பயன்படுத்தும் 26,000 படகுகளுக்கு 150 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.    

நாளை (23) நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (23.05.2023) நள்ளிரவு முதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், … Read more

ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம் பொதுமக்கள் பாவனைக்கு…

கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, மாவனெல்ல மற்றும் ரம்புக்கன ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கக்கூடிய வகையில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஹெம்மாத்தகம நீர்வழங்கல் திட்டம், 20ம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி வைபவ ரீதியாக பெயர் பலகையை திரைநீக்கம் செய்து, நீர் அமைப்பையும் திறந்து வைத்தார். இந்த திட்டத்திற்காக … Read more

வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு பெருமைமிக்க நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைவோம் – ஜனாதிபதி

சுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு! வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு கௌரவமாக வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கேகாலை அரநாயக்க “அசுபினி எல்ல நீர் விநியோகத் திட்டம்” பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் (20) கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம … Read more

கண்டி மறைமாவட்ட ஆயரை ஜனாதிபதி சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (20) கண்டியில் உள்ள ஆயர் இல்லத்திற்குச் சென்று கண்டி மறைமாவட்ட ஆயர் கலாநிதி பேரருட்திரு வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகையை சந்தித்தார். வீட்டுப் பிரச்சினை உட்பட, பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் அவர்களின் நல்ல வாழ்க்கைத் தரத்திற்கு உத்தரவாதம் வழங்கப்படாமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மேற்கொள்ள வேண்டிய … Read more