விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் பிரச்சினைகளை நிவர்த்திக்க விவசாய செயலாளர் அலுவலகம்

விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காண்பதற்காக விவசாய நவீனமயப்படுத்தல் செயலாளர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கான கொள்கைகளை தயாரிப்பது தொடர்பில் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டதுடன் இணைந்து செயற்படும் ஜனாதிபதி செயலகம், விவசாய அமைச்சு உட்பட ஏனைய அமைச்சுக்களின் மேலதிகச் செயலாளர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான தரங்களில் இருக்கின்ற அதிகாரிகளை … Read more

நாட்டின் சில பாகங்களுக்கு அவ்வப்போது மழை….

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 21ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் … Read more

மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடம் ஜனாதிபதி ஆசி பெற்றார்

மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு. கண்டியை அதிநவீன நகரமாக மேம்படுத்த எதிர்பார்ப்பு – மல்வத்து, அஸ்கிரிய பீடாதிபதிகளிடத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேரவாத பௌத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்துவதற்காக பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலகம் கட்டளைச் சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் மல்வத்து, அஸகிரிய பீடாதிபதிகளிடத்தில் கையளிப்பு.திரிபீடகம் மற்றும் பௌத்த இதிகாச நூல்களை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை விரைந்து முன்னெடுக்குமாறு பணிப்புரை.மகா விகாரை பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஜப்பானின் உதவியை பெற்றுக்கொள்ள … Read more

14 வது தேசிய படைவீரர் தின நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில்

தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள படைவீரர்களை நினைவுகூர்வதற்கான சதுக்கத்தில் நேற்று (19) நடைபெற்றது. மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிகொண்டு 14 வருடங்கள் பூர்த்தியாகின்றன. யுத்தத்தில் இராணுவ, விமானப்படை, கடற்படை மற்றும் சிவில் பாதுக்காப்பு படைகளை சேர்ந்த 28,619 படையினர் உயிர் நீத்தனர். 27,000 இற்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் இராணுவ சேவை … Read more

நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான ‘ சஞ்சாரக உதாவ 2023’ பிரதமர் தலைமையில் ஆரம்பம்…

இலங்கையின் சுற்றுலாத் துறை பங்குதாரர்கள் செயற்திறமாக பங்குகொள்ளும் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாக் கண்காட்சியான ’சஞ்சாரக உதாவ 2023’ நேற்று (19) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கத்தினால் (SLAITO) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ’சஞ்சாரக உதாவ 2023’ கண்காட்சியானது, இலங்கையின் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் அத்துடன் இத்துறையில் பிரவேசிக்க விரும்பும் எவருக்கும் அவர்களின் உற்பத்திகள் மற்றும் … Read more

மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

மில்ரன் மோட்டர்ஸ் எனப்படும் தனியார் தொழில் முயற்சியாளர்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களுக்கு மீன்பிடிச் செலவை குறைக்கும் வழிவகைகள் தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உந்துதலுடன் தனியார் முதலீட்டாளர்களின் குறித்த மின்கல இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனை பாணந்துறை பகுதியில் பரீட்சித்துப் பார்த்த கடற்றொழில் அமைச்சர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய மேம்படுத்தப்பட்டுள்ள படகு இயந்திரங்களை கடற்றொழில் அமைச்சர் நேற்று (19) பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. … Read more

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணி துரிதப்படுத்தப்படும்

ஒரு மாதத்திற்குள் அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை. டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாக மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கிறோம்.நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு … Read more

இலங்கை வங்கியின் 2022 ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை வங்கியின் 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கை இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேராவினால் நேற்று (18) நிதி அமைச்சில் வைத்து பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை வங்கியின் www.boc.lk மற்றும் பங்குச் சந்தையின் www.cse.lk இணையத்தளங்கள் ஊடாக 2022 ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பார்வையிடலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரத்துறையினர் தெரிந்துகொள்வதற்காக மேற்படி அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை வங்கியின் நிறைவேற்று அதிகாரி … Read more

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதோடு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கோரும் நிதிச் சலுகைகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கல்விசார் ஊழியர் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டதுடன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து, பல்கலைக்கழகக் … Read more