ஜூன் மாதம் 15ஆம் திகதி 7800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம்

ஜூன் மாதம் 15ஆம் திகதி 7800 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கி, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அத்துடன், அடுத்த வருடம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும். மேலும், எதிர்காலத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் போன்ற அதிக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள … Read more

பாராளுமன்றத்தை பார்வையிட வடக்கில் இருந்து 700 மாணவர்கள் வருகை

யாழ்ப்பாணத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் அண்மையில் (மே 12) பாராளுமன்றத்தை பார்வையிட வருகை தந்திருந்தனர். மாணவர்கள் பாராளுமன்றத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் சேவை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பாராளுமன்றத்தின் கலரியிலிருந்து சபா மண்டபத்தில் நடைபெறும் செற்பாடுகளைப் பார்வையிட மாணவர்களுக்கு வாய்ப்புப் கிடைத்ததுடுன், பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்புறமாக குழுப் புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டனர். இதன்போது பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான … Read more

பாராளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை…

ஓய்வுபெறும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25ஆம் திகதி முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு 26ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை மே 24ஆம் திகதி விவாதத்துக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (மே 11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன. … Read more

கனடாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கல்வி, திறன் விருத்தி மற்றும் விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று  முன்தினம் (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து ரயில்களை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் … Read more

பிரேசில் இருந்து இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடை

பிரேசில் இருந்து இலங்கைக்கு மருந்து பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஊடக அறிக்கை வருமாறு:  

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பு

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ கேட்டுக் கொண்டார். அலரி மாளிகையில் நேற்று (17) நடைபெற்ற கலந்துரையாடலில் வர்த்தகம், சுற்றுலா, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. யுனான் மாகாண அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை வந்திருக்கும் வாங் யூபோ, இலங்கையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதற்கு … Read more

கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2023 மே 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் உரிமையாளர்களுக்கு எதிராக சிங்கப்பூரில் இலங்கை வழக்குத் தாக்கல்

இலங்கையின் சட்டமா அதிபரை உரிமைகோருபராக பெயரிட்டு, எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் உரிமை கோரல் மனுத் தாக்கல் செய்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (நிர்வாகம்) சேத்திய குணசேகர தெரிவித்தார். இந்த உரிமை கோரல் கோரிக்கை மனு 2023 ஏப்ரல் 25ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு மே 15 ஆம் திகதி சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தில் (பொதுவான பிரிவு) விசாரணைக்கு எடுத்துக் … Read more

அடுத்த வாரம் முதல் மருந்து வகைகளின் விலைகளைக் குறைக்க தீர்மானம் – சுகாதார அமைச்சர்

அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மருந்து வகைகளின் விலைகளை குறைக்கக் கூடிய பெறுமானம் தொடர்பாக நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணக்காளர் பிரிவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பட்டார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு … Read more

கடந்த கால தவறுகளை திருத்தியமைக்க முடியும்

அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுங்கள் – அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு. முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்பவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து … Read more