நூற்றுக்கணக்கான படையினர் டெங்கு தடுப்பு நடவடிக்கையில்…

சுகாதாரத் திணைக்களத்தால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு தடுப்பு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 141, 142 மற்றும் 144 வது காலாட் பிரிகேட்களின் நூற்றுக்கணக்கான படையினரால் மே 13 முதல் 15 வரை இராணுவத் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய சுகாதாரப் பணியாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச ஊழியர்களுடன் இணைந்து மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் பகுதிகள் மற்றும் வீட்டு வளாகங்களை ஆய்வு செய்தனர். இத் திட்டம் பிடகோட்டை, … Read more

தற்போது பரவும் காய்ச்சலுக்காக பெரசிடமோல் அல்லாத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.!

தற்போது சாதாரண வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என காய்ச்சல் வகைகள் 03 பரவி வருகிறது. இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை என அறியாமல் பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க தெரிவித்தார். இவர் நேற்று (17) சுகாதார ஊக்குவிப்புப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தற்போது டெங்கு நோய் அதிகளவில் பரவி வருவதாகத் தெரிவித்த விசேட … Read more

இராணுவத்தினரின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை பேணி அவர்களை பாரம்பரிய கடமைகளில் ஈடுபடுத்த  நடவடிக்கை

பாதுகாப்பு சீர்திருத்தங்கள் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விளக்கம் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான, அங்கீகரிக்கப்பட்ட அளவுக்குள் பேணி, பாரம்பரிய இராணுவக் கடமைகளில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் (தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம்) திருமதி அஃப்ரீன் அக்தருடன் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். கொழும்பில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் அண்மையில் இந்த … Read more

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் பலமான காற்று வீசக்கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள … Read more

வெற்றிலைக்கேணியில் கவனிக்கப்படாத பாதை படையினரால் சீரமைப்பு

553 வது காலாட் பிரிகேட்டின், 12 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 10வது களப் பொறியியல் படையணி படையினர் இணைந்து வெற்றிலைக்கேணிக்கும் முள்ளியனுக்கு இடையிலான பாழடைந்த பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இவ் வீதி பொதுமக்கள் மற்றும் படையினர் தமது நிர்வாக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதால் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜிஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்களால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் பாதை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் காணப்பட்ட நிலையில் வாகனங்கள் செல்ல … Read more

லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான 'வெளிநாட்டு வீரர்களின் பதிவு' ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக்கின் 4 ஆவது தொடருக்கான ‘வெளிநாட்டு வீரர்களின் பதிவு’ தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. LPL தொடரின் நான்காவது தொடர் போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்வதற்கான பணிகளை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய வெளிநாட்டு வீரர்கள் LPL Player Registration Portal – Sri … Read more

வவுனியாவில் எள் அறுவடையில் அதிக விளைச்சல்

வவுனியா மாவட்டத்தில் பிரதான பயிராக பயிரிடப்படும் எள் பயிர்ச்செய்கையில் இம்முறை அதிக விளைச்சலைப் பெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர் தற்போது எள் பயிர்ச்செய்கையின் அறுவடை ஆரம்பமாகியுள்ளதுடன் சந்தையில் எள்ளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் கிட்டத்தட்ட 16000 ஏக்கர்களில் எள் பயிரிடப்பட்டுள்ளது. சந்தையில் ஒரு கிலோ எள்ளின் விலை 800 – 1000 ரூபாய் வரை உள்ளது. இதனால் எள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இம்முறை அதிக பொருளாதார நன்மை கிடைத்துள்ளது. தற்போது மாவட்டத்தில் எள் அறுவடை நடைபெற்று … Read more

மின்சார பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க புதிய நடைமுறை

மின்சார பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை விரைவாக தீர்க்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம தெரிவித்தார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மின்சார பாவனை குறித்தான நடமாடும் சேவையின் விழிப்புணர்வு கூட்டம் நேற்றைய தினம் (16) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். தற்போது மின் பாவனையாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர். திருகோணமலை மாவட்டத்தை உள்ளடக்கியதாக … Read more

இந்திய கடற்படையின் ‘INS Batti Malv’ என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Batti Malv’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (16) காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Batti Malv’ என்ற கப்பல் 46 மீட்டர் நீளமும், மொத்தம் 101 பணியாளர்களையும் கொண்டுள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் MAN Singh M Mane மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் … Read more

மூன்று புதிய ஆளுநர்கள் பதவியேற்பு

மூன்று புதிய ஆளுநர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதன்படி, வடக்கு மாகாண ஆளுநராக திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.