23ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நடத்த தடை

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 29ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 3568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள்; 23.05.2023 நள்ளிரவு முதல் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், அவற்றை விநியோகித்தல், பதாகைகள், துண்டுப் … Read more

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கான அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள்

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் தமது சொந்த காணியில் வீடு கட்டவும் வசதிகள் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் தேவைக்கு ஏற்ப, நகர்ப்புற … Read more

நாடு பூராவும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னனெடுப்பு

டெங்கு ஒழிப்பு செயலணியுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போது டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விரிவான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் 2023 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியை ஒப்பிடும்போது, தற்போது சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் நளின் … Read more

3ஆம் வகை (TYPE 3) ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி

மலையக பகுதிகளில் உள்ள 3ஆம் வகை (TYPE 3) ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகத்தின் ஊடாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று (15) உத்தியோகபூர்வமாக பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு இவ்வரிசி கையளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை … Read more

அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பததற்கும், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளின் பிரிவு 14 இன் படி, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தான் விரும்பிய இடத்தில் நடமாடுவதற்கும், அவர் விரும்பும் இடத்தில் வாழ்வதற்குமான உரிமை உண்டு. இந்த உரிமையைத் தடுக்கும் வகையில் எத்தரப்பினரேனும் செயற்படுமிடத்து, அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்புப் பிரிவிற்கும், ஏனைய பிரிவினருக்கும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று … Read more

25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

25,000 மெற்றிக்தொன் யூரியா உரம் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளமை தொடர்பாக விவசாய அமைச்சர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :

இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களுக்கு இலத்திரனியல் வாகனத்தை இறக்குமதி செய்கின்ற அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்மொழிவு திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று (15) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (16) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் காலி, அக்குரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களுக்கு 2023 மே மாதம் 14 ஆம் திகதி முதல் கடற்படை நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளதுடன் தற்போது, நிவாரணக் குழுக்கள் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைய, நேற்று (15) நில்வலா ஆறு பெருக்கெடுத்து ஓடியதால், மாத்தறை மாவட்டத்தில் அதுரலிய பானதுகம பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக … Read more

வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன

வடக்கு ரயில் பாதை அபிவிருத்திப் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக போக்குவரத்து, நெடுங்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், அடுத்த வருடம் முதல் காங்கசந்துறையில் இருந்து கொழும்பு வரை சிறந்த புகையிரத சேவையொன்றை வழங்குவதற்கு எதிர்பார்ப்பத்திருப்பதாகவும் … Read more

பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்கள் மீட்பு

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து 14ஆம் திகதி காலை மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீட்டர்) தொலைவில், இலங்கையின் மேற்கு கடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணத்தினால் ஏற்பட்ட கடல் நீர் கசிவு காரணமாக மூழ்கும் அபாயத்தில் இருந்த மீன்பிடி படகொன்றில் இருந்த ஆறு மீனவர்கள் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான ஊபு … Read more