கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவ சமூகத்ரிற்கு எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 14 (இன்று) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வலுவடைந்த ஆழஉhய’ என்ற மிக மிகப் பாரிய சூறாவளியானது நேற்று, 2023 மே 13ஆம் திகதி 23.30 மணிக்கு வட அகலாங்கு 17.90 N இற்கும் கிழக்கு … Read more

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில … Read more

பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த முதல் நாடு இலங்கையாகும்

இளைஞர் கோரிய மாற்றத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். இன்று கடமையை செய்தால் இன்னும் 25 வருடங்களில் பெருமிதம் கொள்ள முடியும் – இளையவர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள். இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, “நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது” என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை வோடர்ஸ் ஹெட்ஜில் நேற்று (13) நடைபெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான … Read more

அனுசரணையாளரின் உதவியுடன் படையினரால் பொதுமக்களுக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம்

இராணுவத்தின் சட்ட பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஆர்டீஓ பத்திரனகே அவர்களின் தலைமையில் நன்கொடையாளர்கள் குழு வழங்கிய அனுசரணையில் மொனராகலை கோனகனர பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், மொனராகலை கோனகனர கனிஷ்ட பாடசாலையின் 310 மாணவர்களுக்கு பாடசாலை எழுதுபொருட்கள் மற்றும் கற்றல் உபகரணம் (9) விநியோகிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 121 வது காலாட் பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர், கோனகனர பிரதேசத்தில் … Read more

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்களுக்கு இராணுவத் தளபதி வாழ்த்து

முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதியும், இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் அவர்கள், 34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி ஓய்வு பெறுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னர் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் அழைக்கப்பட்டிருந்தார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது அனுபவம் வாய்ந்த ஒழுக்க அதிகாரியாகப் … Read more

இராணுவத்தின் முயற்சியில் பெரியவளையன்கட்டு மாணவர்களுக்கு 40 ஜோடி காலணிகள்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவின் 562 வது காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் வவுனியா, பெரியவளையன்கட்டு, சின்னவளையன்கட்டுப் பாடசாலையில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகள் வழங்கப்பட்டன. இராணுவத்தின் முயற்சிக்கு பதிலளிக்கும் வகையில், 562 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜேஎம்ஏ ஜயசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, டிஎம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஆர்எம் … Read more

552 வது காலாட் பிரிகேட் படையினர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 552 வது காலாட் பிரிகேட் படையினர் கடந்த செவ்வாய்கிழமை (9) ஆணையிறவுப் பகுதியைக் கடந்து செல்லும் ‘கதிர்காமம் பாதயாத்திரை’ பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர். ஒவ்வொரு வருடமும் தென்னிலங்கை ருஹுணு மஹா கதிர்காம ஆலயத்தின் திருவிழாவில் பங்குபற்ற யாழ் பக்தர்கள் பாத யாத்திரையை மேற்கொள்கின்றனர். 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் … Read more

அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறை நவீனமயப்படுத்தப்படும்

சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட பணத்தை கல்விக்கு செலவிட்டிருந்தால் ஆசியாவின் சிறந்த கல்வித்துறை இலங்கை வசமாகியிருக்கும் – “skills Expo 2023” நிகழ்வில் ஜனாதிபதி உரை. அடுத்த பத்து வருடங்களில் கல்வித்துறையை நவீன மயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவச் சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த பத்து வருடங்களில் சில அரச … Read more

தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் நாட்டில் தாதிச் சேவையில் பெரும் எதிர்கால புரட்சியொன்றுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது..

தாதியர் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் மூலம் நாட்டில் தாதிச் சேவையில் பெரும் எதிர்கால புரட்சியொன்றுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் நேற்று (12.05.2023) அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- இன்று சர்வதேச தாதியர் தினம். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க சேவை … Read more

அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது- மாகாண பணிப்பாளர்

அரசினால் இலவசமாக வழங்கப்படும் தொழில்சார் கற்கைநெறிகளில் முயற்சியாளர்கள் கலந்துக்கொள்ளாத நிலை காணப்படுவதாக மாகான தொழிற்றுறை திணைக்கள பணிப்பாளர் எஸ்.வனஜா தெரிவித்தார். இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வடக்கு மாகாண கைத்தொழிற்றுறை மேம்பாட்டுக்கான கொள்கைத்திட்ட வகுப்பை உருவாக்குவதற்கான கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார். தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் தும்பு தொழிற்சாலை தொடர்பான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் கற்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இந்த பயிற்சிநெறி இலவசமாக வழங்கப்படுவதுடன் நாளுக்கு 200ரூபாய் … Read more