இலங்கை வளர்ந்து வரும் அணி 68 ஓட்டங்களால் வெற்றி

ஜப்பான் தேசிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (11) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கையின் வளர்ந்து வரும் அணி 68 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி, வளர்ந்து வரும் இலங்கை அணியை முதலில் துடுப்பாட பணித்தது. இதற்கமைய களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது. இதனைதொடர்ந்து விளையாடிய … Read more

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான் 3ஆவது ரி20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தொடரை தீர்மானிக்கும் 3ஆவது போட்டி இன்று (12) கொழும்பு எஸ். எஸ். சி. மைதானத்தில் பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை நேற்று (11) நடைபெற்ற பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றது. இதனைதொடர்ந்து … Read more

நாட்டின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 12ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2023 மே 12ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 … Read more

வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  2023 மே 11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் … Read more

தொழில் சட்ட திருத்தத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒத்துழைப்பு

தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்காக அவசிய பூரண சட்ட ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொழிலாளர் சட்டத்தை மாற்றுதல் தொடர்பாக தொழில் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் அமர்வில் இணைந்து கொண்டு, சட்டத்தரணிகள் சங்கத்தின் தொழிலாளர் சட்டம் தொடர்பான ஆலோசகர் சட்டத்தரணி கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார். தொழிலாளர் சட்டத்தை விரைவாக … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நான்காம் கட்ட நட்டஈடாக சுமார் 160.5 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (11) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவின் பங்கேற்புடனும் கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சின் முயற்சியினால், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த 15,000 கடற்றொழிலாளர்கள் மற்றும் … Read more

DREAM11 GAMECHANGER – இலங்கையின் மதீஷ பத்திரன

2023 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று (10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், சிறப்பாக பந்து வீசிய மதீஷ பத்திரன 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு இலகுவான வெற்றியைப் பெற்றுத் தந்தார். போட்டியின் 55ஆவது போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சென்னை அணி தலைவர் மகேந்திர சிங் தோனி முதலில் துடுப்பாட்டத்தை செய்ய தீர்மானித்தார். இதற்கமைய 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி … Read more

புகையிரதத் திணைக்களத்திற்கு புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்கவிருப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது – அமைச்சர் பந்துல குணவர்தன

ஆரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்தலின் கீழ் சுயமாக சேவையிலிருந்து இளைப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதற்கிணங்க புகையிரதத் திணைக்களத்தின் சில ஊழியர்கள் சுயமாகவே ஓய்வுபெற்றுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துலகுணவர்தன இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரச நிறுவனங்களை மூடி, ஊழியர்களை நீக்குதல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கேட்ட வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புகையிரதத் திணைக்களத்திற்குப் புதிய ஊழியர்கள் 3000 பேரை உள்வாங்குவது தொடர்பாக வெளியிடப்படும் … Read more

முதல் ரி20 போட்டியில் இலங்கை வளர்ந்து வரும் அணி வெற்றி

ஜப்பான் தேசிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நேற்று (10) இடம்பெற்ற முதலாவது ரி 20 கிரிக்கெட் போட்டியில் வளர்ந்து வரும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோக்கியோவில் உள்ள சனோ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியை வென்ற ஜப்பான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 97 ஓட்டங்களை எடுத்தது. ஜப்பான் அணி சார்பாக கெண்டோல் கடோவகி பிளெமிங் அதிகபட்சமாக 21 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, இறுதி வரை … Read more

மன்னார் கடல் பகுதியில் 10 வர்த்தக வெடிபொருள் குச்சிகளுடன் 07 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் (08) மன்னார் வங்காலே கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருந்த ஏழு (07) பேர் வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் பத்து (10) குச்சிகள், பதினெட்டு (18) மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் … Read more