நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு விசேட குழு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக வேண்டி விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில், அமைச்சரின் பங்கேற்புடன், நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (08.05.2023) நடைபெற்ற கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது நுவரெலியா மாவட்டத்தை சிறப்பானதொரு சுற்றுலா … Read more

கோதுமை மாவின் விலையில் மாற்றமில்லை

கோதுமை மாவிற்காக சேர்க்கப்பட்டுள்ள மூன்று ரூபா எனும் சுங்க சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கோதுமை மாவின் விலை எக்காரணத்திற்காகவும் மாற்றம் செய்யப்படாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். அவிஸ்ஸாவெல பிரதேசத்தில் (07) நேற்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் குறிப்பிட்ட அரிசிக்கு பிரதான மாற்றீடான கோதுமை மாவிற்காக வழங்கப்பட்ட கிலோவிற்கு மூன்று ரூபா சுங்க சலுகை மீண்டும் நீக்கப்பட்டமை ஊடாக, விவசாயிகளின் வாழ்வாதார மட்டத்தை 90வீதம் … Read more

எரிசக்தியில் புதிய எண்ணிக்கையிலான மெகா வோட்ஸ் சேர்த்துக்கொள்வதற்கான திட்டம்

2027இலிருந்து 2030 வரை பிரதான உற்பத்தித் திட்டத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை சேர்ப்பதற்கான திட்டம் கடந்த வாரத்தில் மின்சார சபையினால் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வினால் வரவேற்கப்பட்டது. குடந்த வருடத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக 211 மெகா வோட்ஸ் செயன்முறைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றில் 146மெகா வோட்ஸ் கூரை மீது இணைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்படத் தக்க எரிசக்தி திட்டத்தின் ஊடாகவேயாகும். 2027 தொடக்கம் 2030 வரையான காலப்பகுதியினுள் மேலதிக 3075 மெகா வோட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுவதற்கு … Read more

அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

இலங்கை அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் சேவையின் தரம் III க்கான போட்டிப் பரீட்சைகள் 2019.02.10 ஆம் திகதி அன்று நடைபெற்றது. அந்த வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்கள் இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான மேலதிக தகவல்களை www.moe.gov.lk என்ற … Read more

கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள்…

நாட்டிலுள்ள கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்திற்கு 23 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பஸ்களை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள டிப்போவிற்கு கையளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று (07) நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. 75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு கிராமப்புற சாலைகளில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்திய … Read more

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மன்னார், எருக்குளம்பிட்டி கடல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 06 பேருடன் ஒரு டிங்கி படகு கைது செய்யப்பட்டது. சட்டவிரோத குடியேற்றங்கள் உட்பட கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரை பிரதேசங்களில் கடற்படையினர் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன் படி 2023 மே மாதம் 05 ஆம் திகதி வட மத்திய கடற்படை … Read more

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 20 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் கோக்கிளாய் கடற்பகுதியில் 2023 மே மாதம் 05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மின் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபது (20) பேருடன் 08 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 … Read more

இந்திய விமானப்படையின் நன்கொடையில், இலங்கை சீன துறைமுக விமானப்படைக் கல்விக் கல்லூரிக்கான புதிய கோட்போர் கூடம்

நீண்ட கால இராஜதந்திர தொடர்பை வலுப்படுத்துவதற்காக இந்திய விமானப்படையினால் நன்கொடையாக, சீன துறைமுக விமானப்படைக் கல்விக் கல்லூரியில் புதிய கோட்போர் கூடமொன்றை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இவ்வைபவம் இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மாஷல் விவேக் ராம் சௌத்ரி மற்றும் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரண தலைமையில் இடம்பெற்றது. நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கேட்போர் கூடத்தில் 700பேருக்கு கேட்போர் கூட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இம்மண்டப ஒலி … Read more

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட இலங்கை சாரணர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்

ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (07) லண்டனில் இடம்பெற்றது. முடிசூட்டு விழாவிற்கு இலங்கை சாரணர் இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார, அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய … Read more

IMDEX ASIA – 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சிங்கப்பூர் சாங்கி கண்காட்சி மையத்தில் 2023 மே 03 முதல் 05 வரை நடைபெற்ற IMDEX ASIA – 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் (International Maritime Security Conference – IMSC ) வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார். IMDEX ASIA, ஆசிய பிராந்தியத்தில் நடைபெறும் ஒரு முன்னணி கடற்படை, கடல்சார் மற்றும் பாதுகாப்பு கண்காட்சியாகும். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் 13வது தொகுதி மற்றும் அதன் … Read more