'இலங்கை அணிக்கு மதீஷ பத்திரன மிகப்பெரிய சொத்து' – மகேந்திர சிங் தோனி

இலங்கை அணிக்கு மதீஷ பத்திரன மிகப்பெரிய சொத்து என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்.எஸ். தோனி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான எம்.எஸ். தோனி, ‘மதீஷவினை நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைப்பதற்கு விரும்பவில்லை. அவர் ஐ.சி.சி. இன் அனைத்து தொடர்களிலும் ஆட வேண்டும் என நினைக்கின்றேன். அவர் இலங்கை அணியின் சொத்தாக எதிர்வரும் காலத்தில் மாறுவார்.’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியன் பிரீமியர் … Read more

காலி முகத்திடல் – ஷங்ரிலா பசுமை வளாக வெசாக் நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இரண்டாவது நாளாக (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இக்கட்டான காலத்தினை நிறைவு செய்து, நான்கு வருடங்களின் பின்னர் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு மக்களுக்கு இம்முறை கிடைத்துள்ளதுடன், மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும். சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கம் மற்றும் சிங்கப்பூரின் வில்லிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளை ஆகியவற்றின் பங்களிப்புடன், … Read more

ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

வருடாந்த ரஷ்ய படைவீரர்களின் வெற்றி தின நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் பங்குபற்றுதலுடன் கொழும்பில் உள்ள போர் நினைவிடத்தில் வியாழக்கிழமை (மே 04) இடம்பெற்றது. நேற்று மாலை கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் அவர்களை ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் அதிமேதகு லெவன் எஸ்.டகர்யன் வரவேற்றார். ரஷ்யர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9ஆம் திகதி “பெரிய தேசபக்தி போரின்” முடிவு தினமாக இந்நிகழ்வை கொண்டாடுகிறார்கள். … Read more

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

கானா மற்றும் ருவண்டா ஜனாதிபதிகளுடனும் கலந்துரையாடல் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை … Read more

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

இலங்கையின் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மட் சப்தார் கான் அவர்களின் கிழக்குக்கான சுற்றுப்பயணத்தின் போது புதன்கிழமை (ஏப்ரல் 26) மதுருஓயா இராணுவப் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இராணுவப் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், அதன் பாடத்திட்டம் மற்றும் இராணுவப் பயிற்சி பாடசாலையின் பயிற்சிகளில் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பான விவரத்தை விரிவுபடுத்துவதற்கு முன் வளாகத்தைச் … Read more

இராணுவ பொலிஸ் படையணியின் 33வது ஆண்டு நிறைவு

இராணுவ பொலிஸ் படையணி தனது 33 வது ஆண்டு நிறைவை 2023 ஏப்ரல் 19-28 வரை பொல்ஹெங்கொட இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் கொண்டாடியது. இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், இராணுவ சம்பிரதாயங்களின்படி அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. அன்றைய பிரதம அதிதியான மேஜர் ஜெனரல் அனில் எல் இளங்ககோன் அவர்களை, ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் … Read more

வெசாக் தினத்தை முன்னிட்டு 14 கைதிகளுக்கு விடுதலை!!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று (05) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே நேற்றைய தினம் இவ்வாறு இலங்கை பூராகவும் உள்ள சிறைகளில் இருற்கு 988 பேர் விடுதலை … Read more

நீர்கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராணுவத்தினர் உதவி

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி மற்றும் செல்லகந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையினர் வெள்ளிக்கிழமை (5) உடனடி உதவிகளை மேற்கொண்டனர். மாவட்டச் செயலக ஊழியர்களுடன், 03 அதிகாரிகள் மற்றும் 23 சிப்பாய்கள் வெள்ளத்தால் சிக்கித் தவித்த 20க்கும் மேற்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் பத்து நபர்களுக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் … Read more

“பௌத்தாலோக மத அனுஷ்டான நிகழ்ச்சி” ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நடைபெற்றது

பிக்கு மாணவர்கள் நாற்பது பேர் மற்றும் 1,200 பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு சுமார் மூவாயிரம் பாடசாலை மாணவர்களை சில் அனுஷ்டானத்தில் ஈடுபடுத்தும் நிகழ்வு இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள ஷங்ரிலா பசுமை மைதானத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை பௌத்த சம்மேளனத்தினால் இந்த “பௌத்தலோக மத அனுஷ்டான நிகழ்ச்சியை” ஏற்பாடு செய்திருந்தது.கொழும்பு வலயத்தில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுடன்,பிரதான பௌத்த பிரசங்கத்தை ஒலபொடுவ ரஜமஹா விகாரையின் … Read more

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023 மே 05ஆம் திகதி இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, … Read more